மன்னார்: மக்கள் எமக்கு தந்த வாக்குப்பலத்தை கொண்டு அம்மக்களுக்கு எதையும் செய்ய முடியாது என்றால் அந்தப்ப பதவியில் இருப்பதில் என்ன பலன் மக்களுக்கு கிடைக்கப் போகின்றது என்று கேள்வியெழுப்பிய வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இம்மாவட்ட மக்களுக்கு எதையும் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை என்றும் கூறினார்.
மன்னார் தாராபுரத்தில் இன்று மாலை இடம் பெற்ற அபிவிருத்தி தொடர்பிலான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் கூறியதாவது –
தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்கான தீ்ர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியவர்கள் வெறும் வாய்ச்சவடல்களால் மட்டும் மக்களை உணர்ச்சிவசப்படுத்துகின்றனர். தேர்தல் காலம் வந்துவிட்டால் மக்களிடம் சென்று அவர்களை ஏமாற்றும் பேச்சுக்களை பேசுகின்றனர்.வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் இந்த மக்களின் விமோசனத்திற்கு எதையும் செய்ததாக தெரியவில்லை.
அதே போல் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் எதையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.ஆனால் எமது கட்சியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நானும், சக பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக்கும் இருக்கின்ற படியாலும், ஆளும் கட்சியில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்காளி என்தால் எம்மால் அதிகாரத்துடன் மக்களுக்கான தேவைகளை பெற்றுக் கொடுக்கமுடிகின்றது.
கொள்கைகைளை பேசி மக்களது வாக்குகளை அபகரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது பிள்ளைகளை வெளிநாட்டிலும்இஉயர் பல்கலைக்கழகங்களிலும் கற்க வைத்துள்ளதுடன், எமது வறிய மக்களின் பிள்ளைகளை கற்கவிடாமல் தடுத்தனர்.
இன்று மாந்தை பிரதேசத்தில் மட்டும் 350 க்கும் மேற்பட்ட அங்கவீனர்கள் இருக்கின்றனர். இவர்களது இந்த இழப்புக்களுக்கான பொறுப்பாளிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் புனர்வாழ்வு பெற்று வந்டத 12 ஆயிரம் பேர்கள் அவர்களது குடும்ப வாழ்வில் இணைந்துள்ளர். அன்று மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்ததினால் தமிழ் மக்களை அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்தேன். அதே போல் இன்னும் புனர்வாழ்வு முகாம்களில் எஞ்சியுள்ளவர்களையும் அவர்களது குடும்பங்களுடன் வாழச் செய்யும் பணிகளையும் முன்னெடுத்துவருகின்றேன்.
எமது மதத்தளங்கள் தாக்கப்பட்ட போது எமது கட்சி அதனை வண்மையாக கண்டித்ததுடன்இஅவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தனை.அதே போல் பாராளுமன்றத்தில் தைரியமாக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்இபிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா மற்றும் அமைச்சராகிய நான் எழுந்து நின்று எமது கடும் ஆட்சேபத்தை கண்டனத்தை வெளியிட்டோம்.
ஆனால் அப்போது பாராளுமன்றத்தில் ளெனமாக அமர்ந்திருந்த இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருக்கும் ரவூப் ஹக்கீம்இஇன்று வீதிச் சந்திகளில் வந்து நின்று பள்ளி உடைப்புக்கு எதிராக பேசுகின்றார்.இது தான் இவரது ஏமாற்று அரசியல் சித்து விளையாட்டாகும்.
எமது வன்னி மாவட்டத்தில் உள்ள மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி பணிகள் இன்று துரிதமாக இடம் பெறுகின்றது. மன்னார் மாவட்டத்தில் அகத்தி முறிப்புகுளம், கட்டுக்கரை நீர்த்தேக்கம், பாதைகள், பாடசாலை கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் நியமனங்கள், சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட எத்தனையோ திட்டங்களை நாங்கள் இம்மக்களுக்காக கொண்டுவருகின்றோம். அதன் மூலம் எமது மக்கள் நன்மையடைவர் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
![RISHATH[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/rishath1.jpg?w=120&h=135)
Leave a comment