-
உயிராபத்து எச்சரிக்கை விடுத்திருந்தும் 7 ரொஹொங்யா முஸ்லிம்களை நாடுகடத்திய இந்தியா
டெல்லி: இந்தியாவில் தங்கியிருந்த 7 ரொஹொங்யா முஸ்லிம்களை வியாழக்கிழமை (04) மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது. குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். வியாழக்கிழமை காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
-
இந்தோனேசியா சுனாமியில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
கல்குடாவில் உதயமாகிறது இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலை
முகமட் சில்மி மீராவோடை: கல்குடாவில் நீண்டகால தேவையாக இருந்த பன்மொழித் தேர்ச்சியுடன் கூடிய அறிவு, ஆற்றல், ஆளுமை, ஆன்மீகம் நிறைந்த மாணவர் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பும் மாபெரும் செயற்திட்டம். 2018 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
-
இந்தோனேசியாவில் தொடரும் நில அதிர்வுகள்: 384 பேர் பலி
ஜகார்த்தா: இந்தேனேசியாவின் சுலாவெசி தீவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு வலுவான நில அதிர்வுகள் ஏற்படுவது தொடர்ந்து வருகின்றது, இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி குறைந்தது 384 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர்.
-
இறுதிவரை பங்களாதேஷ் போராட்டம்: 7வது ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா
துபாய்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்று தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்றது. இறுதி வரை போராடிய வங்கதேசம், இந்திய அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. முன்னதாக, பாகிஸ்தான் அணியை கடைசி சூப்பர் 4 சுற்றில் வீழ்த்திய வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக…
-
7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவின் கடலோர நகரை தாக்கிய சுனாமி
ஜகார்த்தா: இந்தோனீசிய சுலவேசி தீவில் உள்ள பாலு என்ற அந்த நகரம் 6.6 அடி உயர அலைகளின் ஆவேசத்துக்கு இலக்கானது. ஆனால், முன்னதாகவே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தனர். சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோ ஒன்றில் சுனாமி அலைகளைப் பார்த்து மக்கள் கத்திக்கொண்டும், அச்சத்திலும் ஓடுவதும், சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் பள்ளிவாயல் ஒன்று இடிந்துவிழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
-
முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகளை கழட்டிய பேரினவாதமும், ரவுப் ஹக்கீமின் அதிரடி நடவடிக்கையும்
முகம்மத் இக்பால்சாய்ந்தமருது கண்டி: இன ஐக்கியம், இன ஒற்றுமை, இலங்கை எங்கள் நாடு, தேசபக்திஎன்றுஎவ்வளவுதான் விடிய விடிய பேசினாலும் மறுபக்கம் சிங்கள பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. இலங்கைதிறந்த பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்படிப்பு (Post Graduate) பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள அதன் நிலையங்களில் நேற்று ஆரம்பமானது.
-
“விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்,”- மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி
யாழ்ப்பாணம்: “விடுதலைப் புலிகள் தோன்றிய இலங்கையின் வடக்கு பிரதேசத்தை எப்போதும் நாங்கள் எங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்போம்” என்று இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனிநாடுக் கோரிக்கையை முன்வைத்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவத்தினர் அழித்திருந்தாலும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் தனிநாடுதான் வேண்டுமென்று கோரி வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஐபோன்களில் டுயல் சிம் எப்படி இயங்குகிறது..?
லண்டன்: தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபோன் போன்களான எக்ஸ் எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐ போன் எக்ஸ் ஆர் ஆகிய மொடல்களில் டுயல் ஸ்லோட் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பு ஐபட் ஏர் 2 செல்லூர் மொடலில் டூயல் சிம் வழங்கப்பட்டிருந்தது. ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே network மாற்றிகொள்ளலாம். இந்த தொழில் நுட்பம் ஐபேட் ப்ரோ, மொடல்களில் எம்பெட் செய்யப்ட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.
-
குப்பை கொட்டுமிடமாக காட்சி தரும் காஸா சர்வதேச விமான நிலையம்
– MJ காஸா: 8 கோடி 60 லட்சம் டொலர் செலவில் அமைக்கப்பட்ட காஸா யாசிர் அரபாத் சர்வதேச விமான நிலையம் 1998ல் திறக்கப்பட்டது. 2001ம் ஆண்டிலிருந்து இங்கு விமானங்கள் எதுவும் வரவோ, இங்கிருந்து செல்லவோ இல்லை. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்களையடுத்து இவ்விமான நிலையம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 08-10-2000 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை குண்டுகள் வீசி இஸ்ரேல் படைகளால் அழிக்கப்பட்டது.
-
விமானம் ஓட்ட களமிறங்கும் சவுதி பெண்கள்
றியாத்: பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள். பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இதற்காக பெண்கள் பணிக்கு அழைத்து வரப்படுவார்கள். விமானியாக படித்த சவுதி பெண்கள் கூட அங்கு விமானியாக பணியாற்றியது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள்.
-
உலகில் இடம்பெற்ற மிகப்பெரும் போர் ஒத்திகை
SHM மொஸ்கோ: ரஷ்யா உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க தற்போது போர் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், பனிப்போர் கொடுத்த மிக முக்கிய உலக தலைவர்களில் முதன்மையானவர். உளவாளியாக இருந்து நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் என்னவோ இவரை ஆட்சியில் இருந்தோ, அரசியல் பொறுப்பில் இருந்தோ யாராலும் நீக்க முடியவில்லை.