முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகளை கழட்டிய பேரினவாதமும், ரவுப் ஹக்கீமின் அதிரடி நடவடிக்கையும்

  • முகம்மத் இக்பால்சாய்ந்தமருது

hijabகண்டி: இன ஐக்கியம், இன ஒற்றுமை, இலங்கை எங்கள் நாடு, தேசபக்திஎன்றுஎவ்வளவுதான் விடிய விடிய பேசினாலும் மறுபக்கம் சிங்கள பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டே இருக்கின்றது. இலங்கைதிறந்த பல்கலைக்கழகத்தின்பட்டப்பின்படிப்பு (Post Graduate) பரீட்சைகள் நாடு முழுவதிலுமுள்ள அதன் நிலையங்களில் நேற்று ஆரம்பமானது.

அந்தவகையில் கண்டி பொல்கொள்ள நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்காக நேற்றுமுஸ்லிம் மாணவிகள் சென்றபோது அவர்களது பர்தா ஆடைகளை(தலையை மறைக்கும் ஆடைகள்) கழட்டுமாரும், அவ்வாறு பர்தா ஆடைகளைகழட்டமறுத்தால் பரீட்சைகள் எழுத அனுமதிக்கமுடியாது என்றும் பரீட்சை நடத்துனர்களினால் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள்.

இதனை கேட்ட மாணவிகள் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்ததுடன், பெரும்பாலானமுஸ்லிம் மாணவிகள் அவ்வாறு இனவாதிகளின்கட்டளைக்கு பணிந்து பர்தாக்களை கழட்டினார்கள். ஆனாலும் சில மாணவிகள் பர்தாக்களை கழட்ட மறுத்துள்ளார்கள்.

பல நாட்களாக தொடர்ந்து பரீட்சைகள் நடைபெற இருப்பதனால்இவ்வாறான இனவாத செயலினை தடுத்து நிறுத்தும் பொருட்டு இஸ்லாம் பாடத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் JM ஜசார் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களை தொடர்புகொண்டு நடைபெற்ற சம்பவத்தினை எத்திவைத்தார்.

உடனடியாக செயல்பட்ட அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் உயர்கல்வி அமைச்சருடனும், இலங்கைதிறந்த பலகலைக்கழக உபவேந்தருடனும் தொடர்புகொண்டு விடயத்தினை எத்திவைத்து இதற்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

அதன்பின்பு குறித்த பரீட்சை நிலையத்தின் பரீட்சை நடத்துனர்கள் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டதுடன், புதியவர்கள் பரீட்சை நடத்துனர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

முஸ்லிம் மாணவிகள் தங்களது பர்தாக்களுக்குள் விடை எழுதுவதற்கான ஏதாவது குறிப்புக்களைமறைத்துக்கொண்டு வருவதாக சந்தேகம் இருந்தால் அவர்களை பரீட்சை நிலையத்துக்குள் செல்வதற்கு முன்பு பெண் பரீட்சாத்திகளை கொண்டு மறைமுகமான இடத்தில் பரிசோதனை செய்துவிட்டு பின்பு அவர்களை பரீட்சை நிலையங்களுக்குள்அனுமதித்திருக்கலாம்.

ஆனால் இவ்வாறான நடைமுறையினை பின்பற்றாமல் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடையாளமான பர்தா ஆடையினைஎந்தவித கருணையுமின்றிஉடனடியாக கழட்டுமாறு பணித்ததானது ஓர் திட்டமிட்ட முஸ்லிம் விரோத சிங்கள இனவாத செயல்பாடுகளாகும்.

இது இந்த வருடம்தான் முதல்முறையாக நடைபெற்ற சம்பவமல்ல.கடந்த வருடமும் இதே பரீட்சை நிலையத்தில் இவ்வாறு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s