றியாத்: பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள். பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இதற்காக பெண்கள் பணிக்கு அழைத்து வரப்படுவார்கள். விமானியாக படித்த சவுதி பெண்கள் கூட அங்கு விமானியாக பணியாற்றியது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள்.
ரியாத்தை சேர்ந்த் ஃபிளைநாஸ் என்ற விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பணியாற்ற சவுதியை சேர்ந்த பெண் துணை பைலட்டுகளையும், பெண் பணியாளர்களை அழைத்து இருக்கிறது. இந்த நிலையில் துணை பைலட்டுகளாக பணியாற்ற மட்டும் சவுதியில் தற்போது 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது.
yourkattankudy/saudi
அடுத்த மாதம் அங்கு முதல் பெண் துணை விமானி ஒருவர் பறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அங்கு சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பெண்கள் ராணுவத்தில் சேரலாம் என்றும் சல்மான் கூறியுள்ளார். சாதாரண வீராங்கனையாக இல்லாமல் பெரிய பொறுப்புகளும் பெண்களுக்கு ராணுவத்தில் வழங்கப்பட உள்ளது.