ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 1000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வெறும் கைகளால் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.