உலகில் இடம்பெற்ற மிகப்பெரும் போர் ஒத்திகை

  • SHM

russia3434-1536902976[1]மொஸ்கோ: ரஷ்யா உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நடத்தி சாதித்து காட்டி இருக்கிறது. இது உலகம் முழுக்க தற்போது போர் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின், பனிப்போர் கொடுத்த மிக முக்கிய உலக தலைவர்களில் முதன்மையானவர். உளவாளியாக இருந்து நாட்டின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் என்னவோ இவரை ஆட்சியில் இருந்தோ, அரசியல் பொறுப்பில் இருந்தோ யாராலும் நீக்க முடியவில்லை.

இந்த நிலையில் புடின் தற்போது உலகின் மிகப்பெரிய போர் ஒத்திகையை நிகழ்த்திக்காட்டி சாதனை படைத்துள்ளார். இது உலகம் முழுக்க அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போர் ஒத்திகை ரஷ்யாவின் டிசுகுல் என்ற பகுதியில் நடந்தது. 5 நாட்கள் நடக்கும் இந்த ஒத்திகை இன்றோடு முடிகிறது. இதில் ரஷ்யா வீரர்கள் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். 1000 அதிதொழில்நுட்ப , விமானங்கள், 36,000 போர் டேங்குகள், 10,000 போர் வாகனங்கள் என்று மிகப்பெரிய போர் படைகள் எல்லாம் இதில் கலந்து கொண்டு சாதனை படைத்து இருக்கிறது.

russia3434-1536902976[1]

உலகில் தற்போது இதுதான் மிகப்பெரிய போர் ஒத்திகை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக பனிப்போரின் போது உலக நாடுகள் தனித்தனியாக போர் ஒத்திகை செய்தது. கிழக்கு மேற்கு என்று நடந்த இந்த போர் ஒத்திகைகளுக்கு இணையாக தற்போது ரஷ்யா போர் ஒத்திகை செய்துள்ளது பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் சீனாவும் சேர்ந்ததுதான். சீனா இதில் கலந்து கொண்டு ரஷ்யாவிற்கு 1 லட்சம் வீரர்களை அனுப்பி உள்ளது. 1000 வாகனங்களை அனுப்பி உள்ளது. 30 விமானங்களை பறக்க விட்டது. இதனால் ரஷ்யா சீனாவின் படைகள் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்று உலகிற்கு பறைசாற்றப்பட்டுள்ளது.

இது 3ம் உலகப் போருக்கான ஒத்திகை என ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s