இறுதிவரை பங்களாதேஷ் போராட்டம்: 7வது ஆசியக் கிண்ணத்தை வென்றது இந்தியா

india asia cup 2018 finalதுபாய்: ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்கதேசம் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியா வெற்றி பெற்று தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்றது. இறுதி வரை போராடிய வங்கதேசம், இந்திய அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது. முன்னதாக, பாகிஸ்தான் அணியை கடைசி சூப்பர் 4 சுற்றில் வீழ்த்திய வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக வெற்றிகள் பெற்றும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக tied செய்தும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய அணி ஆப்கானிஸ்தான் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 5 முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து இருந்தது. முக்கியமான இறுதிப் போட்டியில் இந்தியா எந்த பரிசோதனையும் இல்லாமல், பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற அதே அணியோடு களம் இறங்கியது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் இடம் பெற்றனர்.

வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் சதம் அடித்தார். 121 ரன்கள் குவித்த அவர் தோனியின் ஸ்டம்பிங்கால் வெளியேறினார். மெஹிதி ஹசன் 32, சௌம்யா சர்க்கார் 33 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். வங்கதேசம் 48.3 ஓவர்களுக்கு 222 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜாதவ் 2, சாஹல் 1, குல்தீப் 3, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா இன்று 3 ரன் அவுட்கள் செய்தது குறிப்பிடத்தக்கது. அதே போல தோனி 2 ஸ்டம்பிங் செய்து கலக்கினார்.

india asia cup 2018 final

வங்கதேசம் நிர்ணயித்த 223 ரன்கள் இலக்கை துரத்த துவங்கியது இந்தியா. துவக்க வீரர் தவான் 15 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடு 2 ரன்களில் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த ரோஹித் 48 ரன்களில் வெளியேற இந்திய அணி 83 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. நிலைத்து ஆடிய ரோஹித் சர்மா 3 சிக்ஸர்கள் பறக்க விட்டார். நான்காவது சிக்ஸுக்கு ஆசைப்பட்டு தூக்கி அடித்த அவர் 48 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த தோனி, தினேஷ் கார்த்திக்கோடு இணைந்து 54 ரன்கள் எடுத்த நிலையில், தினேஷ் 37 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து கட்டையை போட்ட தோனி 67 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஜாதவிற்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் வெளியேறினார். அடுத்து ஜடேஜா, புவனேஸ்வர் இணைந்து அணியை மீட்கும் பணியை செய்தனர். இவர்கள் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா வெளியேறினார்.

ஜாதவ் மீண்டும் உள்ளே வந்தார். அதே சமயம், புவனேஸ்வர் குமார் வெளியேற இந்தியா 7 விக்கெட்கள் இழந்து மீண்டும் பின்னடைவை சந்தித்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், குல்தீப், ஜாதவ் இருவரும் மாற்றி மாற்றி ஒற்றை ரன்களாக எடுத்தனர். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் ஜாதவ் பின்பக்கம் பந்தை தட்டி விட்டு ஓட.. இந்தியா தன் ஏழாவது ஆசிய கோப்பை தொடரை வென்று சாதித்தது. கடைசி வரை போராடிய வங்கதேசம் வெற்றியை பெற முடியவில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s