Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றார் எம்.எம். பாஹிர்

    – சகாப் ஸஜாத் கொழும்பு: 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி விருதை சூழலியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான எம்.எம். பாஹிர் பெற்றுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி பத்தரமுல்லை, கிரேண்ட்போல் றூம் ஹோட்டலில் நடைபெற விருக்கும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து விருது பெறவுள்ள இவர், ப்ரபோதய சஞ்சிகை, திவயின பத்திரிகை ஆகியவற்றில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • ‘இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம்’

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி:இந்த நாட்டிலிருந்து வஹ்ஹாபிஷத்தையும் தவ்ஹீத் ஜமாஅத்தினரையும் விரட்டியடிக்க அனைத்து ஸூன்னத் வல் ஜமாஅத்தினராகிய நாம் ஒன்றுபடுவோம் இவ்வாறு காத்தான்குடி -5 பத்திரியாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற ஸூன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் போது மாநாட்டின் செயலாளர் மௌலவி எம்.எல் ஏ எம் காஸிம் (பலாஹி) JP மாநாட்டின் நோக்கம் தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

  • “அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்”

    காத்தான்குடி:வல்ல இறைவனின் பேருதவியால்  17.10.2014  வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் “அத்வைதிகளின் “சுன்னத் வல் ஜமாஅத்” மாநாடும் அம்பலத்திற்கு வரும் உண்மைகளும்” என்ற கருப்பொருளில்  தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய மாநாடு நடை பெற்றது.

  • அல்கைதாவுடன் தொடர்புடைய முன்னால் இலங்கை அரசியல்வாதி

    கொழும்பு: மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

  • பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை – புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையானது அரசாங்க பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவ மாணவிகளை மையப்படுத்தி பாடசாலைப் பாடங்கள் மற்றும் ஷரீஆத் துறைப் பாடங்களை உள்ளடக்கிய பகுதி நேரக் கற்கை நெறியொன்றினை கடந்த வருடம் முதல் ஆரம்பித்து சுமார் 50 மாணவ மாணவிகளுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

  • காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் ஆசிரிய தின நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு புலமைப்பரிசில் எழுதி இரு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இது ஒரு பின்தங்கிய பாடசாலையாகும். அவ்வாறு சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களினால் கற்பித்த ஆசிரியைகளையும், ஏனைய ஆசிரியர்களையும் கௌரவித்தமையோடு ஆசிரிய தின நிகழ்வுகளும் கொண்டாடப்பட்டது.

  • சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மிக சிறப்புடன் நடை பெற்றது..

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:  சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று காத்தான்குடி5 பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில்   மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி) தலைமையில் மிகவும் சிறப்புடன் நடை பெற்றது.

  • ‘ரணிலின் ஐரோப்பிய பயணமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது’ – ஜனாதிபதி மஹிந்த

    கொழும்பு: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.

  • ‘மகிந்தவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக வருந்துகிறேன்’

    கொழும்பு: இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சரத் என். சில்வா கூறுகின்றார்.

  • கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும்-புதிய நிர்வாகிகள் தெரிவுமும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் டோஹா: கத்தாரில் இயங்கி வரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியாகிய மௌலவி மற்றும் ஹாபிழ்களை உள்ளடக்கிய கத்தார் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்றியத்தின் பொதுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை 17.10.2014 கத்தார் பின் லஹ்தான் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • நேற்று (17) ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் காத்தான்குடியில் பரவலாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹு எமது காத்தான்குடி பிரதேசத்தில்; சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ‘எல்லாம் அவனே’ எனும் வழிகெட்ட அத்வைதக் கொள்கையை மௌலவி அப்துர் ரஊப் அவர்கள், பிரச்சாரம் செய்தும், கட்டுக்கதைகளையும், கப்ஸாக்களையும் கூறி பாமர மக்கள் குழு ஒன்றை மதம் மாற்றியும் வைத்திருப்பது யாவரும் அறிந்ததே!

  • சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் புதுவருட நிர்வாகிகள் தெரிவு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது.

←Previous Page
1 … 638 639 640 641 642 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar