Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “2015 வரவு செலவுத்திட்டத்திற்கமைய அடுத்த வருடம் ஜனவரி முதல் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் பாரிய வறுமை ஒழிப்பு திட்டம் அமுல்”  – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2015 வரவு செலவுத்திட்டத்திற்கமைவாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் பாரிய வறுமை ஒழிப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

  • ‘விவாதம் செய்வது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது’ – காஸிம் (பலாஹி) : ஒலி வடிவம்

    – NTJ

  • ‘விவாதம் செய்வது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது’ காஸிம் (பலாஹி) அதிரடியாகத் தெரிவிப்பு

    – தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடக அறிக்கை காத்தான்குடி: கடந்த 19.10. 2014 அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களால் ‘அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த பல வருடங்களாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மௌலவி அப்துர் றஊபை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருப்பதும், மௌலவி அதற்கு மறுத்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையான விடயாமாகும்.

  • சம்பள கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரை நவம்பர் மாதம் முதல் விசேட கொடுப்பனவு

    கொழும்பு: வரவு – செலவு திட்டத்தின் முன்மொழியப் பட்ட அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய சம்பள கட்டமைப்பு தயாரிக்கப்படும் வரை அரச ஊழியர்களுக்கு 3000 ரூபாவும் ஓய்வூதியக்காரர் களுக்கு 2500 ரூபாவும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று தெரிவித்தார்.

  • 19 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்றது பாகிஸ்தான்

    – MJ டுபாய்: பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் டுபாயில் இடம்பெற்றுவந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 221 ஓட்டங்களால் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றுள்ளது. 1994 ம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் (Home) ஒரு விக்கட்டாலும், 1995 இல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் (Away) 74 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலியாவை இறுதியாக பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தது.

  • காத்தான்குடி கடற்கரையில் இறந்த நிலையில் சிறிய ரக மீன்கள் மற்றும் நண்டுகள் கரையொதுங்கி வருகின்றன

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரையில் 26-10-2014 இன்று அதிகாலையிலிருந்து இறந்த நிலையில் சிறிய ரக மீன்கள் மற்றும் நண்டுகள் கரையொதுங்கி வருவதாக காத்தான்குடி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒரு வகையிலான நண்டுகளும் சிறிய ரக மீன்களும் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றது.

  • உலகக் கிண்ணம்: தனது நாட்டுக்கான முதலீடாக மாற்றப்போகும் அவுஸ்திரேலியா!

    – SHM மெல்போன்: அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி தனது நாட்டின் வர்த்தகத்தை பெருக்கிக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29ம்தேதிவரையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வைத்து நடைபெற உள்ளது. இதையொட்டி ‘மெட்ச் அவுஸ்திரேலியா ஸ்போர்ட்ஸ் பிஸ்னஸ் புரோக்ராம்’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலிய அரசு துவக்கியுள்ளது.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு 25-10-2014 நேற்று சனிக்கிழமை இரவு புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வீதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வீதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 26-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த வீதி முன்றலில் இடம்பெற்றது.

  • ‘நாட்டின் நலனும், சமூக நல்லிணக்கமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்போம்’ – சுபைர்

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்- கிம்மா நிறுவனம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்து வருகின்றது. அதன் தொடரில் 25.10.2014ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் சுபைர் ஹாஜியார் பவுண்டேசன் அழைப்பின் பேரில், நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் பணிப்புரைக்கமைய பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் மற்றும் செயலாளர் எம்.ஐ.றிஸ்வின் ஆகியோரைக்கொண்ட குழுவினர் ஏறாவுருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

  • அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் சூபிச உலமாக்கள் சபையின் செயலாளர் மௌலவி காசீம்(பலாஹி) வெளியேற்றம்…….

    – Breaking News – AK-70 காத்தான்குடி:காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார்கள், இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு புதிய காத்தான்குடி அன்வர் மஸ்ஜித் இல் (25.10.2014 சனிக்கிழமை) இரவு  08.45  மணியழவில்  ஆரம்பிக்கப்பட்டு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது

  • கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல்:   ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் சிலர் சிறிது நேரம் வெளிநடப்பு

    – Breaking News: – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தினால் புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயலில் 25-10-2014 இன்று சனிக்கிழமை நடாத்தப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஹிஜ்ரி 1436 முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வில் பங்கேற்ற காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் முக்கிய உலமாக்கள் சிலர் சிறிது நேரம் நிகழ்விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

←Previous Page
1 … 633 634 635 636 637 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar