அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் சூபிச உலமாக்கள் சபையின் செயலாளர் மௌலவி காசீம்(பலாஹி) வெளியேற்றம்…….

OLYMPUS DIGITAL CAMERA

– Breaking News

– AK-70

காத்தான்குடி:காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார்கள், இமாம்கள் சம்மேளனத்தின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் நிகழ்வு புதிய காத்தான்குடி அன்வர் மஸ்ஜித் இல் (25.10.2014 சனிக்கிழமை) இரவு  08.45  மணியழவில்  ஆரம்பிக்கப்பட்டு கூட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த போது அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் சூபிச உலமாக்கள் சபையின் செயலாளர் மௌலவி MLAM காசீம்(பலாஹி)JP  அவர்களின் வருகையினால் மேற்படி  ஒன்று கூடலில் குழப்ப நிலை தோன்றியது.

மௌலவி MLAM காசீம்(பலாஹி) அவர்கள்  நிகழ்வுக்கு வந்து ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டார். காசீம் மௌலவியின் வருகையும்,அமர்வையும் ஆரம்பத்தில் பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. 

பின்னால் அமர்ந்து கொண்டிருந்த காசீம் மௌலவியை முன்னால் வந்து அமருமாறு ஒரு மூத்த உலமா  சொல்ல காசீம் மௌலவியும் வந்தமர்ந்த போதுதான் குழப்ப நிலை தோன்றியது பள்ளிக்குள் இருந்த சில உலமாக்கள் பள்ளியை விட்டு வெளியேறி  வெளியில் நின்று சத்தமிட்டனர். 

அகில இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் சூபிச உலமாக்கள் சபையின் செயலாளர் மௌலவி MLAM காசீம்(பலாஹி)JP இன் வருகையை முற்றாக எதிர்த்தவர்களில் ஒருசிலர்தான் ஏனைய உலமாக்கள் என்ன என்றாலும் செய்யட்டும் என்ற வகையில் சபையில் அமர்ந்து கொண்டனர். 

அஷ்ஷெய்ஹ் MACM ஜெய்னுலாப்தீன்(மதனி) BA ,அஷ்ஷெய்ஹ் M. றிழ்வான் (மதனி)BA. அஷ்ஷெய்ஹ்.எம்.மீராசாஹிபு (மதனி) போன்றவர்கள் மௌலவி MLAMM காசீம்(பலாஹி)JP இன் வருகையை முற்றாக எதிர்த்தனர்.

நிலைமையினை மிக அவதானமாக கையாண்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள், கதீப்மார்கள், இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர்,செயளாலர் மௌலவி MLAM காசீம்(பலாஹி) யை  தொடர்ந்து நிகழ்வினில்  இருக்க  அனுமதிக்காது வெளியேற்றினார்கள். மௌலவி MLAMM காசீம்(பலாஹி) மௌனம் கலந்த அமைதியுடன் பலரும் பார்த்திருக்க வெளியேறினார்.

மௌலவி MLAMM காசீம்(பலாஹி) இன் வெளியேற்றத்தை அடுத்து நிகழ்வுகள் நிசப்பதமாக இடம் பெற்றதுடன் நிகழ்வின் பிரதம அதிதயாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்  MLAM ஹிஸ்புல்லா MA-MP, நகர முதல்வர் அல்ஹாஜ் SHM அஸ்பர் JP,சட்டத்தரனி முகம்மது உவைஸ் LLB , உடபட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது  தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார்கள் இமாம்கள் சம்மேளனத்தின் அங்கத்தவர்களாக உள்ள இமாம்கள், முஅத்தின்களின் பிள்ளைகள் மூவருக்கு  பிரதி அமைச்சர்  MLAM ஹிஸ்புல்லா MA-MP இனால் நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வு  அஷ்ஷெய்ஹ் MAM மசூத் (காசிமி)  JP இன் நன்றி உரையுடன் இராப்போசனத்துடன் நிறைவுற்றது. 

Published by

Leave a comment