உலகக் கிண்ணம்: தனது நாட்டுக்கான முதலீடாக மாற்றப்போகும் அவுஸ்திரேலியா!

australia– SHM

மெல்போன்: அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி தனது நாட்டின் வர்த்தகத்தை பெருக்கிக்கொள்ள அவுஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29ம்தேதிவரையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வைத்து நடைபெற உள்ளது. இதையொட்டி ‘மெட்ச் அவுஸ்திரேலியா ஸ்போர்ட்ஸ் பிஸ்னஸ் புரோக்ராம்’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலிய அரசு துவக்கியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி தனது நாட்டு வர்த்தகம்இ முதலீடுஇ சுற்றுலாஇ சர்வதேச கல்வி துறைகளில் அதிக முதலீடுகளை ஈர்க்க இந்த திட்டம் உதவும். அவுஸ்திரேலிய வர்த்தக துறை அமைச்சர் அன்ட்ரியூ ரோப் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘இந்தியா, தென் ஆப்பிரிக்கா,  நியூசிலாந்து, பாகிஸ்தான், சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவுக்கு ஈர்க்க கிரிக்கெட்டை பயன்படுத்த உள்ளோம்.

அடுத்த ஆண்டின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக உலக கோப்பை கிரிக்கெட் அமைய உள்ளது. உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இந்த போட்டிகளை கண்டு களிக்க உள்ளனர். மக்களோடு மக்களை இணைக்க கிரிக்கெட் ஒரு அருமையான வாய்ப்பு’ என்றார்.

world cup 1992
அணித் தலைவர்கள் – WC-1992

Published by

Leave a comment