‘விவாதம் செய்வது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது’ காஸிம் (பலாஹி) அதிரடியாகத் தெரிவிப்பு

ntj1– தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஊடக அறிக்கை

காத்தான்குடி: கடந்த 19.10. 2014 அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களால் ‘அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சம்மேளனம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த பல வருடங்களாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மௌலவி அப்துர் றஊபை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருப்பதும், மௌலவி அதற்கு மறுத்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையான விடயாமாகும்.

எம்மைப் பொருத்தமட்டில் மௌலவி அப்துர் றஊப் மிஸ்பாஹி அவர்களை என்ன விலை கொடுத்தேனும் ‘விவாத மேடைக்கு’ அழைத்து வர வேண்டுமென்பதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்திருக்கிறோம். ஆனாலும் அவர் ‘கழுவிய மீனில் நழுவிய மீனாகவே’ இருந்து வருகிறார். நாம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமலும்இ முறையான விவாத அழைப்புக்களை எதிர்கொள்ளாமலும் இருந்து வரும் மௌலவி அப்துர் றஊப் அவர்களுக்கு கடந்த 21.10.2014 அன்று மற்றொரு கடிதத்தை அனுப்பி வைத்தோம். அந்தக் கடிதத்தை உலமாஉகள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி எம்.எல்.ஏ.எம் காஸிம் (பலாஹி) அவர்களின் கையிலேயே நேரடியாக ஒப்படைத்திருந்தோம். 

ntj1

கடிதத்தை வாங்கிக் கொண்ட காஸிம் மௌலவி கடந்த 24.10.2014 அன்று எமக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தைக் கீலே காணலாம்.

cassim

இக்கடிதத்தைப் பார்வையிட்ட நாம் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாங்கள் சொல்வது போல் குறித்த ‘உலமாஉகள் சம்மேளனம்’ பத்ரிய்யாவில் இல்லையென்றால் அந்த அமைப்பு எங்கே இருக்கிறது? அதன் தலைவர் மௌலவி அப்துர் றஊப் அல்லவா? அதன் செயலாளர் தாங்கள் அல்லவா? அப்படியாயின் சரியான முகவரியைக் கொடுங்கள்’ என நாம் கேட்ட போது அவர் ‘முகவரியைக் கொடுக்கலாம் தான். ஆனால் விவாதம் செய்வது ஷரீஅத்திற்கு (மார்க்கத்திற்கு) முரணானது’ என்றார். அப்போது நாம் ‘அப்படியென்றால் உங்கள் மேடையில் வைத்து ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி எமது ஜமாஅத்தின் விவாதச் சவாலை ஏற்கிறேன் என்றாரே..? அது மட்டும் ஷரீஆவிற்கு உட்பட்டதா?’ எனக் கேட்ட போது ‘அது அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு’ எனக் கூறி நழுவிக் கொண்டார். இந்த உரையாடலை முழுமையாகச் செவிமடுக்க  இங்கே சொடுக்கவும்.

ntj

காஸிம் பலாஹியின் வாக்கு மூலத்திலிருந்து சில சந்தேகங்கள் எழுகின்றன.

01. ‘விவாதம் செய்வது ஷரீஅத்திற்கு முரண்’ எனக் கூறுவது அப்துர் றஊப் தரப்பினரின் தப்பிக்கும் யுக்தி அல்லவா?

02. ‘விவாதம் செய்வது ஷரீஅத்திற்கு முரண்’ என்பது ‘உலமாஉகள் சம்மேளனத்தின்’ நிலைப்பாடு என்றால் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி தனது உரையில் எமது விவாத சவாலை ஏற்றுக் கொண்டது ஷரீஅத்திற்கு முரணானதா?

03. ஷரீஅத்திற்கு முரணானவைகளைச் சொல்பவரை மேடை ஏற்றுவது நியாயமா?

04. ‘விவாதம் செய்வது ஷரீஅத்திற்கு முரண்’ என்றால் எதற்காக மௌலவி அப்துர் றஊப் எமதூர் உலமாக்களை 80, 90 காலகட்டத்தில் விவாதத்திற்கு அழைத்தார்?

இஸ்லாமிய சகோதரர்களே!

‘ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்’ என்பது போல் இந்த அத்வைதிகள் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்திற்கு வராமல் இருக்க நொண்டிச் சாட்டுக்களையும், பொருந்தாக வாதங்களையும் சொல்லி வருவது நகைப்பிக்கிடமானதாகும். பொய், புரெட்டுக்களைக் கூறி புரோகிதம் வளர்க்கும் இந்த அத்வைதிகளின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்!

Published by

Leave a comment