19 வருடங்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்றது பாகிஸ்தான்

Pakistan – MJ

டுபாய்: பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் டுபாயில் இடம்பெற்றுவந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 221 ஓட்டங்களால் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றுள்ளது. 1994 ம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் (Home) ஒரு விக்கட்டாலும், 1995 இல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் (Away) 74 ஓட்டங்களாலும் அவுஸ்திரேலியாவை இறுதியாக பாகிஸ்தான் வெற்றிபெற்றிருந்தது.

இதன் பின்னர் சுமார் 20 வருடங்களுக்குப்பின்னர் முதற்தடவையாக பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவை வெற்றிபெற்றிருக்கிறது. இரு இன்னிங்கிஸிலும் தலா சதத்தைப் பெற்ற யூனுஸ்கான் போட்டி நாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1:0 எனும் அடிப்படையில் பாகிஸ்தான் முன்னிலையில் இருக்கின்றது.

Pakistan

Published by

Leave a comment