‘நாட்டின் நலனும், சமூக நல்லிணக்கமும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்போம்’ – சுபைர்

eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்- கிம்மா நிறுவனம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட சமூகப்பணிகளை செய்து வருகின்றது. அதன் தொடரில் 25.10.2014ம் திகதி சனிக்கிழமை ஏறாவூர் சுபைர் ஹாஜியார் பவுண்டேசன் அழைப்பின் பேரில், நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்களின் பணிப்புரைக்கமைய பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர் மற்றும் செயலாளர் எம்.ஐ.றிஸ்வின் ஆகியோரைக்கொண்ட குழுவினர் ஏறாவுருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயனாளிகள் சந்திப்பில், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், தற்போதைய பிரதித்தவிசாளருமான கௌரவ அல்ஹாஜ் எம்.எஸ். சுபைர் அவர்கள், மற்றும் பிரதேச மரண விசாரணை அதிகாரி அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்கள். ஏறாவூர் சுபைர் ஹாஜியார் பவுண்டேசனுடன் இணைந்து முதற்கட்டமாக ஏறாவூரில் 40 பயனாளிகளுக்கு குடிநீர் வசதியினைப் பெற்றுக்கொடுப்பதில் கல்குடா ,அல் கிம்மா நிறுவனம் முன்னின்றமைக்கு நன்றி கூறியதுடன், அல் கிம்மா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகளை எதிர்வரும் காலங்களில் சுபைர் ஹாஜியார் பவுண்டேசன் மூலமாக ஏறாவூர் மக்களுக்கு கிடைக்கச்செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்,.

eravur

மேலும், எதிர்வரும் காலம் நம் நாட்டில் தேர்தல் காலமாக இருக்கப்போவதை யாவரும் அறிந்திருப்பீர்கள்.இதனால் யார்,யார் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகிறார்கள் என்ற அங்கலாய்ப்பில் நீங்கள் எல்லாம் இருப்பீர்கள். பொறுமையாக இருங்கள்.

எங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரசானது யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை.ஆனால் நாட்டின் நலனிலும்,இன நல்லுறவிலும் கூடிய அக்கறை கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே எங்கள் கட்சியும்,தலைமையும் ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார்.

eravur (2)

Published by

Leave a comment