Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஏமாற்றப்பட்ட தேரர் – ரூபா 10 இலட்சம் மோசடி

    அபூஹக் தமுத்தேகம: தங்க முலாம் பூசப்பட்ட இரும்புத் துண்டுகள் மற்றும் போலி மாணிக்கக் கற்கள் ஆகியவற்றை தமுத்தேகமவில் தேரர் ஒருவருக்குக் கொடுத்து 10 இலட்சம் ரூபாவினை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஜோடியொன்றை கண்டுபிடிப்பதற்காக பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  • “பொதுவேட்பாளர் தகுதி ரணிலுக்கே உண்டு” – சரத் பொன்சேகா

    கொழும்பு: பொது வேட்பாளராக போட்டியிட மிகவும் தகுதியானவர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் ரணில் விக்ரமசிங்க அனுபவ முதிர்ச்சியுடையவர். ரணில் அனுபவமும் திறமையும் உடையவர்.

  • கைசேதப்பட்டது கட்சியல்ல! மக்களே..!!

    – ஆதம்பாவா வாக்கீர் ஹுசைன் அம்பாறை: என்றுமில்லாதவாறு ஒரு வகை அழுத்தத்திலும், தீர்மானமில்லாததுமான ஒரு வகை அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இப்போது முக்கி முனகிக்கொடிருக்கும் இந்நாட்களில், மூன்றாவது தடவை என்னும் முசீபத்து நாட்டை சூழ்ந்து கொண்டு அட்டூழியம் பண்ண துடிக்கின்றது.

  • கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவன ஏற்பாட்டில் இடம்பெற்ற அதிபர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு

    – KCDA ஊடகப்பிரிவு மீராவோடை: கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு 2014.11.18ம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 04.15 மணியளவில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் KCDAயின் உபதலைவர் ஜனாப். ஏ.எம்.எம். முா்சிதீன் தலைமையில் இடம்பெற்றது.

  • இஸ்ரேலில் தொடரும் தாக்குதல்கள்: 4 இஸ்ரேலியர், 2 பலஸ்தீனியர் பலி!

    ஜெரூசலம்: மேற்கு ஜெரூசலத்தில் இருக்கும் யூத வழி பாட்டுத்தலம் மீது இரு பலஸ்தீனர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதோடு மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தாக்குதல் நடத்திய இரு பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

  • “சம்மாந்துறை மண் மேலும் 6 வருடங்களுக்கு பா.ம. பிரதிநிதித்துவத்தை இலக்குமாயின் நான் பதவி விலகுவேன்”

    – ஹாசிப் யாஸீன் சம்மாந்துறை: எமது நாட்டின் அரசியலில் எதிர்வரும் 19ம் திகதி ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் மாற்றத்தின் பின்பு மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால் பாராளுமன்ற தேர்தலை நடத்தாது பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாக அலரிமாளிகை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

  • காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் கலை நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் கலை நிகழ்வு அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி சபா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.ஏ.றஹ்மான் கலந்து கொண்டார்.

  • காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு அமெரிக்க அதிகாரி விஜயம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 03-08-1990 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் (18-11-2014) இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.

  • காத்தான்குடியில் ‘மரணித்து’விட்ட உலமாக்கள்!

    – அபூ ஸைனப் காத்தான்குடி: நாட்டின் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை வருடாந்தம் காத்தான்குடி பள்ளிவாயல்களில் கொண்டாடி வருவது வாடிக்கையாகிவிட்டது. இஸ்லாத்தைக் கற்று, போதிக்க வேண்டிய உலமாக்களே, பள்ளிவாயலில் அமர்ந்து ஓர் மனிதனின் பிறந்த நாளுக்கு பிரார்த்திக்கும் நிகழ்வு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் நிகழ்ந்துவருவது வெளிப்படையானது.

  • லுணுகலயில் மாணிக்ககல் மழை! வதந்தியால் பரபரப்பு!!

    பதுளை: பதுளை மாவட்டம் லுணுகல பிரதேசத்தில் மாணிக்கக் கல் மழை பெய்ததாக மக்கள் மத்தியில் வதந்தி பரப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை லுணுகல பிரதேசத்தில் கடுமையான மழை பெய்துள்ளது. மழையுடன் மாணிக்கக் கற்கள் விழுந்ததாக நினைத்து மக்கள் சில பொருட்களை பொறுக்கியுள்ளனர்.

  • சாய்ந்மருது பிரதேச திவிநெகும குடும்பங்களுக்கு வீட்டைப் புதுப்பிப்பதற்கான கொடுப்பனவுகள் கையளிப்பு

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சு தேசிய ரீதியில் ‘செழிப்பான இல்லம்’ எனும் தொனிப் பொருளில் வீடுகளை புதுப்பிப்பதற்கு ரூபா 10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக முதற் கட்டமாக திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (18) இடம்பெற்றது.

  • காத்தான்குடி நகர சபைக்கு -அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் விஜயம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் இன்று (18-11-2014) செவ்வாய்க்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.

←Previous Page
1 … 616 617 618 619 620 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar