ஜெரூசலம்: மேற்கு ஜெரூசலத்தில் இருக்கும் யூத வழி பாட்டுத்தலம் மீது இரு பலஸ்தீனர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதோடு மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தாக்குதல் நடத்திய இரு பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார். ஜெரூசலத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் இடம்பெற்ற அதிக உயிர்ப் பலி கொண்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது.
மறுபுறத்தில் பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பு தாக்குதலை வரவேற்றுள்ளது. ஹர் நொப் வழிபாட்டுத்தலம் மீதான தாக்குதல், பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த இயற்கையான பதிலடியாகும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.
யூததலத்தில் காலை வழிபாட்டு வேளையில் கத்தி மற்றும் கோடாரியுடன் நுழைந்த பலஸ்தீனர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் இவர்கள் துப்பாக்கியையும் ஏந்தி வந்ததாக ஆரம்பத்தில் வந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த கஸ்ஸான் அபூஜமால் மற்றும் அவரது மைத்துனன் ஜபால் அல் முகப்பிர் என்பவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் பலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் என்று இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய் திகள் குறிப்பிடுகின்றன.
“நான் தப்பிக்க முயன்றேன். கத்தியுடன் இருந்த நபர் என்னை நோக்கி வந்தான். எனக்கு இடை யில் கதிரைகளும், மேஜைகளும் இருந்தன… எனது தொழுகை போர்வை அதில் சிக்கிக் கொண்டது. அதனை அகற்றிவிட்டு அங்கிருந்து தப்பி வந்தேன்” என்று சம்பவ இடத்தில் இருந்த ஒருவர் இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.
தக்குதலில் காயமடைந்த ஆறு வழிபாட்டாளர்கள் மற்றும் இரு பொலிஸார் ஜெரூசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதேவேளை தாக்குதல் தாரிகளது வீடுகள் இருக்கும் பகுதியில் நேற்று பின்னேரம் சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இதன்போது இஸ்ரேல் படையினருக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையில் மோதலும் ஏற்பட்டுள்ளது.
அரபிகள் கிழக்கு பகுதியிலும் யுதர்கள் மேற் கிலும் பெரும்பான்மையாக இருக்கும் ஜெரூசலத்தில் அண்மைய மாதங்களில் இஸ்ரேல் மற்றும் பலஸ் தீனர்களுக்கு இடையிலான பதற்றத்தின் தொடர்ச்சியாகவே இந்த வன்முறை சம்பவம் இடம்பெற் றுள்ளது.
கடந்த ஞாயிறு பின்னேரம் பலஸ்தீன பஸ் ஓட்டுநர் ஒருவரின் உடல் அந்த பஸ்ஸூக்குள்ளேயே தூக்கிலிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டபோதும், யூத குடி யேற்றக்காரர்களால் அவர் கொல்லப்பட்டிருப்ப தாக பெரும்பாலான பலஸ்தீனர்கள் நம்புகின் றனர்.
ஜரூசலத்தில் கடந்த ஒரு சில வாரங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது ஆறு இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸூரூசலம் கொதிக்கிறது. அனைவரும் இது நடக்கும் என்று எதிர்பார்த்தார்கள்” என்று ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் காசி ஹமாத் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலியர்கள் மீது தாக்கு தல் நடத்திய பலஸ்தீனர்களின் வீடுகள் நேற்று தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் இஸ்ரேலிய தாக் குதல்தாரிகளை அவர்கள் ஒருபோதும் தண் டிப்பதில்லை. நாம் மேலும் வன்முறைகளை எதிர் பார்க்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு ஜரூசலத்தில் இருக்கும் புனித அல் அக்ஸா பள்ளிவாசலையொட்டி அங்கு அடிக்கடி மோதல்கள் இடம்பெறுகின்றன. சிலவேளை அவை உயிர்ப்பலி கொல்லும் தாக்குதல்களாக மாறி வருகின்றன.
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் தொடர்ச்சியாக தீவிர வலதுசாரி யூதர்கள் நுழைய முற்படுவது தொடர்பில் பலஸ்தீனர்கள் கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வளாகம் தமது புனித தலமாக யூதர்கள் கருதி வருகின்றனர். அதேபோன்று பள்ளிவாசல் வளாகத்திற்குள் தொழுகைக்குச் செல்லும் முஸ்லிம்களுக்கு இஸ்ரேல் படையினர் கடும் கட்டுப்பாடுகளை விதிப் பதும் பலஸ்தீனர்களின் கோபத்திற்கு காரணமாகும்.
Published by

Leave a comment