அம்பாறை: என்றுமில்லாதவாறு ஒரு வகை அழுத்தத்திலும், தீர்மானமில்லாததுமான ஒரு வகை அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இப்போது முக்கி முனகிக்கொடிருக்கும் இந்நாட்களில், மூன்றாவது தடவை என்னும் முசீபத்து நாட்டை சூழ்ந்து கொண்டு அட்டூழியம் பண்ண துடிக்கின்றது.
இந்த முசீபத்தை முன்னின்று நடத்தி , அதற்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியோ இன்று கோவணமும் இன்றி, திக்கற்ற திரிசங்கு நிலையில் இருப்பது வேதனை தரும் விடயம் அல்ல, அந்த கட்சியை நம்பி வாக்களித்த லட்சக்கணக்கான மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்பையும் கேலிக்கூத்தாகவும் மாற்றிக்கொண்டு வருகின்றது.
என்று முஸ்லிம் காங்கிரஸ் சுய நிர்ணயம், தனி அலகு, உரிமை, சுய கௌரவம், என்று மக்களை ஒரு வகை கற்பனை என்று அறிய முடியாத ஒரு கற்பனை உலகுக்கு உசுப்பேற்றி அழைத்துசென்று வாக்குகளை பெற்று, அந்த வாக்காளர்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக இயங்க ஆரம்பித்தார்களோ , அன்று முதல், அவர்கள் அனுபவித்தது எல்லாம், அவமானம்களும், அழிப்புகளும், உரிமை மீறல்களுமே அன்றி வேறோன்றுமில்லை.
இங்கு நாம் முஸ்லிம் காங்கிரஸ் ஐ பற்றி பேசும்போது , நம்மை அறியாமலே , மற்ற பிற முஸ்லிம் அரசியல் வாதிகளை பற்றிய ஒரு எண்ணம் அல்லது கேள்வி எழாமலும் இல்லை, அதாவது , இன்று இலங்கையில் நடைபெறும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஐ மற்றும் விமர்சிப்பது சரியா என்பதே அது , என்னைப்பொறுத்தவரை, அது ஓரளவுக்கு மேல் சரி என்றே தோன்றுகின்றது. ஏனெனில், நாட்டில் உள்ள, எந்தவொரு பிற முஸ்லிம் கட்சிகளோ, அல்லது பிற முஸ்லிம் அரசியல் வாதிகளோ, அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு முன், போலியான வாக்குறுதிகளை, அல்லது அடைய முடியாத லட்சியம்களை சொல்லி வாக்கு கேட்கவுமில்லை, அவர்கள் ஆகக்குறைந்தது , அவர்கள் சார்ந்த மக்களின் வாழ்வாதார, மற்றும் உட்கட்டமைப்பு பற்றியே பேசியும், அதை செய்து காட்டியும், அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்னும்போது அம்மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களை ஆதரிப்பார்கள் அல்லது அந்த அரசியல் வாதிகள் மீண்டும் மீண்டும், தம்மை நிரூபிக்க அரசுடன் சேர்ந்து அடக்கி வாசிப்பார்கள்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் ஐ பொறுத்த வரை, அவர்களுக்கு முன் இருக்கும் தாரக மந்திர்மகளாக ஒவ்வொரு தேர்தல்களிலும், பின்வருபனவற்றை சொல்லி சொல்லியே மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்கின்றனர்,
1. இந்த கட்சி அபிவிருத்தி என்ற மாயைக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல.
2. முஸ்லிம்களுக்கென்று தனியான அலகு ஒன்ற பெற்றுத்தருவோம்.
3. முஸ்லிம்களுக்கென்று தனியான நிர்வாக மாவட்டம் ஒன்றை பெற்றுத்தருவோம்.
4. எங்களுக்கு, ஆட்சி அதிகாரத்தை விட , எம்மக்களின் சுய நிர்ணயம், சுய கௌரவமே முக்கியம்.
5. மத்தியில், ஆட்சியமைக்க முஸ்லிம்கள் தான் காரணம் என்ற பெருமையை பெற்றுத்தருவோம்.
6. மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் காட்டித்தந்த வழியில் தான் எங்கள் பயணம் எப்போதும் இருக்கும்.
7. குரான், ஹதீஸ் அடிப்படையிலேயே எமது கட்சி செயற்படுகிறது.நான் மேலே சொன்ன பல பெறுமதியான வாக்குறுதிகளை, எனது அறிவிற்கு உட்பட்டு வேற எந்தவொரு பிற முஸ்லிம் கட்சியோ,அல்லது அரசியல் வாதிகளோ சொன்னதாக சரித்திரம் இல்லை. ஆக, முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி ஒன்றுதான் இவ்வாறான அதி உச்ச முஸ்லிம் உணர்வை தூண்டக்கூடிய வகையில் பேசி, மக்களின் சிந்தித்து , பிரித்தறியும் தன்மையை, முஸ்லிம் என்ற நாமத்தின் மூலம் மழுங்கடித்து , அதிக வாக்குகளை பெற்று பின் மக்களின் எந்தவொரு விருப்பு , வெறுப்புக்கும் மதிப்பளிக்காது தான்றோந்தித்தனமான முடிவுகளை எடுப்பது என்பது வரலாற்று உண்மை மட்டுமல்ல, நாம் கண்கூடாகவே கண்டதும் கூட, இதற்கு உதாரணமாக 18 ஆம் மூலத்திருத்தற்றிட்கு கண்மூடி ஆதரவளித்தை இங்கு சுட்டி காட்ட முடியும்.
இன்று இலங்கை, சனநாயக குடியரசை, ஒரு சர்வாதிகார அரசாக மாற்ற துணை போகும் ஒரு சட்டமூலமே அது என்பதை சட்டம் மேதையும், முஸ்லிம் காங்கிரஸ் இன் தலைவரும் அறியாமல் இல்லை.
இங்கு ஒரு முக்கிய விடயம் ஒன்றை நாம் கருத்தில் எடுக்கத்தான் வேண்டும். இலங்கை முஸ்லிம் அரசியலை நாம் இங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இற்கு முன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இற்கு பின் என்று ஒப்பு நோக்கவேண்டிய கடப்பாடு இப்போது மெதுவாக நம் மனதில் எழுகின்றது. அதில் முக்கியமாக, முஸ்லிம் அரசியலில், முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் இன் வருகைக்கு பின்னர் தான் மக்கள் அதிகப்படியான இன்னலகையும், ஒரு வகை அச்ச நிலைமையிலும் அதிலும் குறிப்பாக மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பின்னரான நிலைமையில் அது மிகவும் உச்சத்திற்கு சென்றுள்ளதை,சமீபத்திய சம்பவங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். ஆக, இங்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது இரட்டை முகத்தை மிகவும் கச்சிதமாக அரசுக்கும், மக்களுக்கும் காட்டி, அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு வெறும் ஏமாற்றத்தையும், இலவு காத்த கிளியின் நிலையையுமே ஏற்படுத்தி உள்ளது.ஒரு பொது மகனாக, எந்தவொரு அரசியல் அழுத்தம்களும், அரசியல் தேவைகளும் இல்லாத ஒருவனாகவே இந்த கட்டுரையை நான் எழுதுவது இங்கு யாருக்கும் வெளிபடயாகவோ,அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பதல்ல. இங்கு எனக்கு எழும் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தயாரா ?? நான் மேலே சொன்ன 7 தாரக மந்திரமும் இல்லாமல், வெறும் மற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் போல நடைமுறை சாத்தியம் உள்ள விடயம்களை மட்டும் சொல்லி அல்லது மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வாங்காது , முஸ்லிம் என்ற சொல்லை வைத்து பிழைப்பு நடத்தாமல், வாக்கு கேட்க முடியுமா ?? அப்போதுதான் இங்குள்ள ஒவ்வொரு கட்சியின், வாக்கு பலம், அல்லது வங்குரோத்தின் பலம் எம் போன்ற மக்களுக்கு புரியும்.
இங்கு முஸ்லிம் காங்கிரஸ் ஐ, நானோ, அல்லது வேறு எந்த முஸ்லிம் குடிமகனுமோ , அரசுடனோ, அல்லது வேறு எந்த கட்சியிடமோ சேர வேண்டாம் என்று சொல்ல விழயவில்லை. மாறாக, தெளிவான முறையில் உங்கள் எதிர்கால அரசியல் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், நீங்கள் மகிந்தவுடன் அல்லது ரணிலுடன் அல்லது பொது பல சேனாவுடன் சேர விரும்பின் அதற்கான நியாமனான , தெளிவான காரனம்களை மக்கள் முன் தெளிவு படுத்துங்கள், உங்களை நம்பி மக்கள் அல்ல ,மக்களை நம்பித்தான் நீங்கள் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.
Published by

Leave a comment