லுணுகலயில் மாணிக்ககல் மழை! வதந்தியால் பரபரப்பு!!

rainy[1]பதுளை: பதுளை மாவட்டம் லுணுகல பிரதேசத்தில் மாணிக்கக் கல் மழை பெய்ததாக மக்கள் மத்தியில் வதந்தி பரப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை லுணுகல பிரதேசத்தில் கடுமையான மழை பெய்துள்ளது. மழையுடன் மாணிக்கக் கற்கள் விழுந்ததாக நினைத்து மக்கள் சில பொருட்களை பொறுக்கியுள்ளனர்.

லுணுகல நகரிலிருந்து வெல்லவாய பிரதேசம் நோக்கிச் செல்லும் நான்கு கிலோ மீற்றர் துர பாதையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மாணிக்கக் கற்களை பொறுக்கி எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. வீதியில் பயணம் செய்த லொறியொன்றிலிருந்து விழுந்த பாசான் வகைகளையே மக்கள் இவ்வாறு மாணிக்கக் கல் என நினைத்துள்ளனர். கோமேத மற்றும் ரபாஸ் என்னும் இரண்டு வகை பாசான் வகைகளே மக்களினால் இவ்வாறு சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment