காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு அமெரிக்க அதிகாரி விஜயம்

meera jumma– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: கடந்த 03-08-1990 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் பொது மக்கள் தொடர்பாடல் அதிகாரி திருமதி. நிகோலி சுலிக்ஸ் தலைமையிலான குழுவினர் (18-11-2014) இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.

அங்கு விஜயம் செய்த அக்குழுவினரை மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் தலைவரும்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ.எம்.சுபைர் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

இதன் போது தொழுகை நிறைவேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்திய இடத்தையும், மரணித்தவர்களின் பெயர் பட்டியலையும் பார்வையிட்டனர்.

meera jumma

மேற்படி பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொர்பில் மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நளீமி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உப செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர் ஆகியோரினால் தெளிவுபடுத்தப்பட்டது.

meera mosque (2)

இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் இணைப்பாளர் நௌசாட் முஹைதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர், தேசிய சுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜி.எம்.றிஸ்வி, மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

meera mosque

காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்தபோது 103 முஸ்லிம்கள் பாஸிசப் புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment