Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தனது அலுவலகத்தை காலி செய்கிறார் அமைச்சர் ஏக்கநாயக்க!

    கொழும்பு: கலாசார அலுவல்கள் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க தனது அமைச்சின் அலுவலகத்தை காலி செய்து கொண்டிருப்பதாக சற்று முன்னர் கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.நேற்று சனிக்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கை விடுமுறை நாளான இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

  • மஹிந்தவின் ‘வலக்கை’ பொறியியலாளர் அம்ஜத் ‘பெல்ட்டி’ அடித்தார்! மஹிந்த அரசுக்கு பலத்த இழப்பு!!

    கொழும்பு: ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் பெல்டி அடித்திருக்கிறார். . நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத். இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.

  • நெருக்கடியில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்தை கலைக்க தயாராகும் அரசாங்கம்!

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சவாலில் வெற்றி பெறும் தந்திரமாக நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள். பொது வேட்பாளராக போட்டியிட உள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்

  • “ஹகீம் விரைவில் ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவார்”

    கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சலூன் கதவு பழுதடைந்துள்ளதாக ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெற்றியீட்ட முடியாது. சனி மாற்றம் ஜனாதிபதிக்கு சரியில்லை. அண்மையில் சுவரொட்டி ஒன்றில் ஜனாதிபதிக்கு எல்லைகள் கிடையாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

  • இலங்கை அரசியல் வரவலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் நாளைய திங்கட்கிழமை…

    கொழும்பு: நாளை திங்கட்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்போது முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வர் என்று செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

  • “சமுகத்தை ஒழுங்கமைக்க சட்டம் அவசியம் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை”: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

    ஏறாவூர்: மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தால் இயற்றப்படுகின்ற நியதிச் சட்டங்களையும், வழக்காறுகளையும், நீதிமன்றங்களால் வழங்கப்படும் முத்தீர்ப்புக்களையும் மூலங்களாகக் கொண்டு சட்டம் உருவாக்கப்படுகின்றது. ஒரு சமுகத்திலுள்ள எல்லோரும் சட்டத்திற்கு கட்டுப்படுகின்றனர். சமுகத்தை ஒழுங்கமைக்க சட்டம் அவசியம் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

  • ஆளும் கட்சிக்குள் தொடரும் பதவி மாற்றங்கள்!

    கொழும்பு: ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நிலையிலேயே அவரது கட்சிப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • மைத்திரிபால சிறிசேன…

    கொழும்பு: பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.

  • “பாரிய கற்பாறையை அசைத்தாலும் ஜனாதிபதியை அசைக்க முடியாது”

    கொழும்பு: முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பாரிய துரோகம் இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நேற்று வரையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன, குடும்ப அரசியல் பற்றி எவ்வாறு குற்றம் சுமத்த முடியும்?

  • மதில் மேல் உட்கார்ந்திருக்கும் பூனைகள்…

    – அபூஸைனப் காத்தான்குடி: ஆளும் அரசாங்கத்தில் ஏற்பட்டிருக்கும் தற்போதய ஆட்சியின் பலவீனம் காரணமாக ஆடிப்போயிருக்கிறது அரசாங்கம். ஜனாதிபதி ஆளும் கட்சி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆளும் கூட்டணி அறிவித்தவுடன், காத்தான்குடியைத் தவிர இலங்கையில் வேறு எங்கிலும் மக்கள் கணக்கெடுக்கவே இல்லை!

  • ‘குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்கவே போட்டி’: மைத்திரிபால

    கொழும்பு: இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார்.

  • மாகாணசபை உறுப்பினர் அ. அஸ்மின் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: மன்னார் மாவட்டத்தின் முசலி, மாந்தைமேறுகு, நானாட்டான், அடம்பன், மன்னார் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 27 தெரிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு பண்ணையாளாருக்கு 10,000 ஆயிரம் ரூபா வீதம் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா செலவில் கோழிக் குஞ்சுகள், கோழிக்கூடுகளுக்கான பொருத்துகள், ஆடு, மற்றும் சீமெந்து ஆகியன…

←Previous Page
1 … 614 615 616 617 618 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar