-
அட்டாளைச்சேனை வீரர் மிப்ரான் சாதனை!
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 51வது தேசிய சாம்பியன் (51st National Army Championships) போட்டியில் நீளம்பாய்தல் நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மிப்ரான் 7.38m தூரம் பாய்ந்து 1வது இடத்தை பெற்றுள்ளார். இவர் இராணுவ படை சார்பாக இப் போட்டியில் கலந்து கொண்டார்.
-
சிறுவர் உரிமை பற்றிய ஆணைக்குழுவின் பயிற்சி
அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் பற்றிய பயிற்சி செயலமர்வு 27.11.2014 இன்று கிறீன் காடன் ஹோட்டலில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
-
“அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்” ராஜித சேனாரத்ன
கொழும்பு: தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தின் மொத்த பற்களையும் ஒன்றொன்றாக கழற்றி எடுப்போம். மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்ட பிரதேச திவிநெகும பொறுப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 27-11-2014 இன்று வியாழக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலத்தில் இடம்பெற்றது.
-
மக்களால் உருவான தேசியத் தலைவன்: 42 இற்குள் 15 வருடம்
குறிப்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்கு இன்று (27) பிறந்த நாளாகும் (42வயது). அத்துடன் பாராளுமன்ற அரசியலில் 15வது வருடத்தில் காலடி எடுத்தும் வைக்கின்றார். இதனை முன்னிட்டு இக்கட்டுரை. உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் என்ற இனம்தான் திட்டமிட்டுத் தாக்கப்படுகின்ற இனமாகும்.
-
ஆட்சி மாற்றத்தை விடவும் ஆட்சிமுறை மாற்றத்தினையே முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்
இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் சகல சமூகங்களும் சமமாக மதிக்கப் படுகின்ற ஒரு தேசத்தைக் கட்டி எழுப்புவதில் எமது வரலாற்றுப்பணி தொடர வேண்டும்..! – மஸிஹுதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: மூன்றாவது முறை ஜனாதபதித் தேர்தலில் இல்லாத இஸ்லாமியப் பயங்கர வாதத்திற்கெதிராக யுத்தப் பிரகடனம் செய்யப்படுமா என்ற அச்சத்தில் நாம் இருந்த வேளை.. அதற்கான முஸ்தீபுகளும் ஒத்திகைகளும் அண்மைக்காலமாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருந்த வேளை…. இல்லை, இல்லை.
-
காயமடைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் மரணம்!
– AF- 90 சிட்னி: அவுஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.நேற்றுமுன் தினம் நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் அபாட்டின் பந்து, பிலிப்பின் தலையில் பலமாக தாக்கி இருந்தது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே விழுந்தார் ஹியூக்ஸ்.
-
ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கட் போட்டி!
லாஹூர்: கென்யா கிரிக்கெட் அணி அடுத்தமாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டிசம்பர் 11-ம் திகதி கென்யா அணி, பாகிஸ்தான் வந்து சேரும். அதன்பின் 13-ந்தேதி முதல் 20-ம் திகதி வரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக் கிறது.
-
“மகிந்தவைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்: நாட்டின் நலனுக்காக எனது குடும்பம் உயிர்த்தியாகம் செய்யவும் தயார்”
கொழும்பு: “மகிந்த ராஜபக்ஷ போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கிறேன்” என்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
-
தொடர்ச்சியான அடைமழையினால் கல்முனை பிரதேசம் இருளில்
– ஹாசிப் யாஸீன் கல்முனை: அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பிரதேச வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை: வெள்ளத்தில் மூழ்கிய காத்தான்குடி வீதிகள்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.