ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கட் போட்டி!
லாஹூர்: கென்யா கிரிக்கெட் அணி அடுத்தமாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. டிசம்பர் 11-ம் திகதி கென்யா அணி, பாகிஸ்தான் வந்து சேரும். அதன்பின் 13-ந்தேதி முதல் 20-ம் திகதி வரை 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக் கிறது.
அதன்பின் 21- ம் திகதி கென்யா அணி தாயகம் திரும்பும். 5 போட்டிக ளும் லாகூரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா அணி பாகிஸ்தானில் முன்னதாகவே சுற்றுப் பயணம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அரசு அனுமதி கொடுக்காததால் தடை பட்டு வந்த இந்த தொடர் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடி வந்தது. ஒரு போட் டியில் பங்கேற்பதற்காக மைதானத்திற்கு பஸ்சில் செல்லும்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின் எந்த அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2009-மார்ச் மாதம் இடம்பெற்ற இலங்கை அணி மீதான தீவிரவாதத் தாக்குதலின்போது இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கையில்…
Leave a comment