Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஹூனைஸ் பாரூக் ‘பெல்டி’!

    கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக், ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார்.

  • இலங்கை-இங்கிலாந்து முதலாவது ஒருநாள் போட்டி இன்று

    கொழும்பு: இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து தொடரில் பங்குபெறவுள்ள இல ங்கை வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட்டால் வெளியிடப்பட்டுள்ளது.

  • கல்முனை மாநகரசபையில் இடம்பெற்ற அரசியல் காடைத்தனம்: காணொளி

  • “பெண்களும் ஆண்களும் சமமில்லை”- துருக்கி ஜனாதிபதி எர்துகான்

    ஸ்தன்புல்: பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த முடியாது என்று துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். பெண்ணியவாதிகள் தாய்மையை நிராகரிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.ஸ்தன்புலில் மாநாடொன்றில் உரையாற்றிய எர்துகான், “பெண்களையும் ஆண்களையும் ஒரே நிலையில் வைக்க முடியாது. அது இயற்கைக்கு முரணானது” என்றார்.

  • வெஸ்டர் றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் – சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்

    ஹாசிப் யாஸீன் கல்முனை: கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி படுகாயம்!

    – SHM மெல்போர்ன்: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிலிப் ஹியூக்ஸ் தலையில் எதிர்பாராதவிதமாக பந்து தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலிய முதல் தர கிரிக்கெட் போட்டியானது, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.

  • “சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசம்பர் 23, 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும்”

    கொழும்பு: ஹொரகொல்லையில் அமைந்துள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சமாதிக்கு, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, இன்று மலர் அஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தினார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேன,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பநிலைத் தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

  • ஹஜ் யாத்திரையை எதிர்த்த அமைச்சருக்கு சிறை

    டாக்கா: ஹஜ் யாத்திரையை விமர்சித்த வங்க தேசத்தின் முன்னாள் அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிந்த சமயத்தில், அப்துல் லத்தீப் சித்திக்கி என்ற அந்த நபர், தான் ஹஜ் யாத்திரையை முற்றாக எதிர்ப்பதாகவும், முகமது நபி வணிக நோக்கத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்தப் பழக்கத்தை தோற்றுவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

  • ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் செய்தி

    – ACJU கொழும்பு: எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் உரிமையாகும். எனவே, இதன் அடிப்படையில் நம்நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

  • அரசாங்கத்தின் பட்ஜெட் நிறைவேறியது

    கொழும்பு: இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 152 பேர் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், 57 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். அரசாங்கத் தரப்பிலிருந்து மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளியேறியிருந்த நிலையில், இந்த பட்ஜெட் மீதான இறுதி வாக்கெடுப்பு பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

  • “கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது”- மகிந்தவுக்கு டுவிட்டரில் மைத்திரி பதிலடி!

    கொழும்பு: “கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்க முடியாது” என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் மகிந்தவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்திருந்தார்.

  • ஜனாதிபதித் தேர்தலும், முஸ்லிம் அரசியலும்

    – I.L.M. றிபாஸ் கொழும்பு: இலங்கையின் அரசியல் களம் எதிர்வரும் ஏழு வாரங்களுக்கு மிகவும் உஷ்னப்பட்டதாகவே இருக்கப்போகிறது. கட்சித் தாவல்களும் காசுப் பரிமாறல்களும் மிக தீவிரமாக நடந்தேற இருக்கின்றன. அரசியல் என்பது மக்கள் பணி என்பதிலிருந்து பணம் கொழிக்கும் இலாபகரமான வர்த்தகமாக மாற்றப் பட்டிருக்கின்ற இந்த சூழலில் பல அரசியல் வியாபாரிகள் பெரும் கோடீஸ்வரர்களாக தம்மை நிலை நிறுத்திக்கொள்ள தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.

←Previous Page
1 … 612 613 614 615 616 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar