கொழும்பு: “மகிந்த ராஜபக்ஷ போன்றவர்களை பற்றி நன்கு புரிந்து கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருக்கிறேன்” என்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“நானும் எனது அன்பான மனைவியும் மூன்று பிள்ளைகளும் நாட்டு மக்களுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கின்றோம்”.
“நம்மை குறித்து நமது மனசாட்சி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனது பாதுகாப்புக்கான பொறுப்பை மக்களிடம் ஒப்படைக்கின்றேன்” எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
Published by

Leave a comment