மட்டக்களப்பு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் பற்றிய பயிற்சி செயலமர்வு 27.11.2014 இன்று கிறீன் காடன் ஹோட்டலில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நிகழ்ந்தது.
இப்பயிற்சியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள யுனிசெப் நிறுவன ஆலோசகர் திரு.பி. ரவிச்சந்திரன் விரிவுரைகளையாற்றினார். பங்குபற்றுனர்களாக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள். சமூக சீர்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயிற்சியினைப் பெற்றனர்.
Published by



Leave a comment