ஓட்டமாவடி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரின் தலைமையில் இரவு 7 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பேச்சாளர்களாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மற்றும் அதன் பொதுச் செயலாளர் MR. நஜா முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்ட பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகள் 300ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களிலும் மேற்கொண்டுவரும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகவே தெரிவு செய்யப்பட்ட பிரமுகர்கள் மத்தியில் மேற்படி மக்கள் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment