எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன?

ntjகாத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன? என்ற தலைப்பில் 12.12.2014 அன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் நடைபெற்ற விஷேட சொற்பொழிவு (சில மாற்றங்களுடன்)

உரை: மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உப தலைவர்,
தொகுப்பு: மௌலவி M.C.M ஸைனீ (உமரீ) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர்,
விஷேட சொற்பொழிவு பின்வருமாரு ஆரம்பிக்கப்படுகின்றது.

1-இந்நாட்டில் நாம் யார்? என்ற வரலாறை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்நாட்டில் 1300 ஆண்டுகளாக நாம் இருக்கிறோம் என நமது அறிஞர்களால் நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளது. இது கூட தவறான தகவலாகும். இதையும் இனவாதிகள் ஏற்கவில்லை. நமக்கென்று தனியான ஒரு வரலாற்று நூல் இல்லை! இப்போதுதான் சிறிதாக தொகுக்க ஆரம்பித்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். நமது வரலாற்றைத் தேடிக் கொள்ள இருக்கும் ஆவணங்களாக மகாவம்சமும் சூழ வம்சமுமே காணப்படுகின்றன.

2-எழுதுங்கள்! படியுங்கள்! எனும் மார்க்கத்தில் இருந்தவர்கள் எமது வரலாற்றை எழுதுவதில் கவனம் செலுத்தவில்லை! ஆனால் எழுதுவதை ஊக்குவிக்காத மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். இதை நாம் சிந்திக்க வேண்டும்.

3- இனவாதிகள் “நம்மை வந்தான் வரத்தான்” என்று தைரியமாகச் சொல்வது எமக்கென்று வரலாற்று நூல் இல்லை என்ற காரணத்தினால்தான் என்பது உண்மையிலேயே வேதனைக்குரிய விடயம்தான். இது குறித்து ஆலிம்கள், அறிஞர்கள், சமூக நலன் விரும்பிகள் கவலைப்படுவதாக அறியமுடியவில்லை.

4-பர்மாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சனை? இலங்கை முஸ்லிம்களை விட அதிகமானவர்களாக அவர்கள் இருந்தும் வரலாற்றைப் அவர்கள் பாதுகாக்காததால் அவர்களால் தங்களை நிரூபிக்க முடியவில்லை. எமது வரலாற்றை நாம் தேட வேண்டும். பாதுகாக்க வேண்டும். உலக அமைப்பில் மேற்கு உலக நாடுகள் கிறிஸ்தவ மத நாடுகளாகவும் கிழக்குலக நாடுகள் பௌத்த மத நாடுகள் (சைனா> ஜப்பான்,கொரியா, தாய்லாந்து) மத்திய பகுதியும் ஆபிரிக்காவுமே இஸ்லாம் ஆட்சி செய்யும் நாடுகளாக உள்ளன. வரலாறு தெரியாவிட்டால் அடங்கியிருப்போம். உள்ளுரில் அட்டகாசம் புரிபவன் வெளியூருக்கு சென்றால் அடக்கி வாசிப்பான் அல்லவா? இதே போன்றுதான் எமது எதிர்காலங்கள் ஆக்கப்படலாம்.

5-கடந்த 10 வருடங்களாக மேற்கொள்ளப்படும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான தேடலிலிருந்து “முஸ்லிம்களின் வரலாறு 1300 வருடங்கள் அல்ல” என்பது நிரூபணமாகியுள்ளது. இது குறித்த சான்றுகளை ஆய்வு செய்தால் 02 முடிவுகள் எமக்குக் கிடைக்கின்றன.

01. பௌத்தர்களைப் போன்று நாங்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள்

02. அவர்களை விடவும் முந்தியவர்கள்

6- நமக்கு வரலாறு என்று பாடசாலைகளில் சொல்லப்படுவதில் “அரேபியர் வந்து சிங்களப் பெண்களை விட்டு விட்டு இந்துப் பெண்களைத் திருமணம் முடித்தார்கள்” ஏன் சிங்களப் பெண்ணை முடிக்கவில்லை? இப்படி கல்யாணம் முடித்ததால் தான் நாம் தமிழ் பேசுகிறோம் என்று எமக்கு படித்துத் தருகிறார்கள். இதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

7- மகாவம்சத்தை குணராசா என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மகாவம்சம் பற்றி ஒரு வாசிப்பு என்று ஒரு நூல் எழுதியுள்ளார். ஆவா முஹ்ஸின் என்பவரும் “இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் எனும் நூல்” ஒன்றை எழுதியுள்ளார். சோனகர் தேசம் எனும் நூலும் முஸ்லிம்களின் வரலாறை பிரதிபலிக்கக் கூடியதாகவே உள்ளது. மேற்குறித்த இந்த ஆவணங்கள் அனைத்தும் நாம் அரேபிய இறக்குமதி என்பதை தெளிவாகவே மறுக்கிறது.

8- மலாய் மொழி மக்கள் மலாய்ப் பாசையில் பேசுகிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் அரேபிய இறக்குமதி என்றால் ஏன் நம்மில் யாரும் அறபி பேசவில்லை? குர்ஆன் அறபியில் இருந்தும் தொழுகை முறை அறபியில் இருந்தும் நம்மில் யாரும் அறபி பேசவில்லையே?? தோற்றத்தில் நாம் யாராவது அறபியர்களைப் போன்று இருக்கிறோமா? இலங்கையில் முஸ்லிம்களுக்காக முதலில் உருவாக்கப்பட்ட தத்ரீஸ் குர்ஆனில் அறபிச் சொற்கள் இல்லை (அவன்> இவன்> உரல்> குருநல் என்பன போன்ற வார்த்தைகள் கூட அறபு வார்த்தைகளல்ல. தமிழ் வார்த்தைகள்தான். எனவே நாங்கள் அரேபியர்களின் வழித்தோன்றல்கள் என்பது கற்பனைக் கதை ஆகும். அப்படியானால் இலங்கையில் அரேபியத் தொடர்புகளுக்கான சான்றுகள் கிடைக்கின்றனவே என சிலர் கேட்கலாம். ஆமாம் அது உண்மைதான். இலங்கைக்கு அரேபியத் தொடர்பு இருந்தது. இஸ்லாம் வந்த போது அரேபியர்கள் இஸ்லாத்தைப் பரப்ப வந்தார்கள். இஸ்லாம் வருவதற்கு முன்பும் வியாபார நோக்கில் வந்தார்கள். ஆனால் அவர்கள் கல்யாணம் முடித்ததால் இஸ்லாம் பரவியது என்பதைதான் நாம் அடியோடு மறுக்கிறோம்.

9- மஹா வம்சம் பற்றி சில தகவல்கள்

அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூல் இஸ்லாமிய வரலாற்றின் நீதி நூல். முஸ்லிம்களுக்கு சாதகமான விடயங்களும் பாதகமான விடயங்களும் அதில் இருக்கும். ஆனால் மகா வம்சத்தில் பௌத்தர்களின் வரலாறே உள்ளது. இது வரலாற்றை தொகுக்கும் சரியான வழிமுறை அல்ல. ஆனால் மகா வம்சத்தில் பௌத்தர்களின் வரலாறே உள்ளது. இது வரலாற்றை தொகுக்கும் சரியான வழிமுறை அல்ல.

10-கி.பி 04ம் நூற்றாண்டில் தீப வம்சம் என்ற நூல் எழுதப்படுகிறது. அந்நூலை யார் எழுதினார்? என்ற விபரம் கிடையாது. கி.பி 06ம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்படுகிறது. அதற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தொகுப்பது தான் சூழவம்சம்.மகா வம்சம் இலங்கையின் வரலாறு சொல்லும் நூல் அல்ல. ஒரு வம்சத்தின் வரலாற்று நூல் ஆகும்.

11-முஸ்லிம்கள் இலங்கை நாட்டின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு பௌத்தர்கள் ஏற்றுக் கொண்ட நூற்களிலிருந்தே ஆதாரங்களைத் தரலாம்

01. பண்டு காபய மன்னன் என்பவர் பௌத்தன் அல்ல. கி.மு இலங்கையை ஆண்டவன். இவன் அநுராத புறத்தில் சோனாக்களுக்கு காணியை வழங்கியதாக மகா வம்சம் கூறுகிறது (சோனாக்கள் என்பது யார் என்று ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிப்படும்)

02. “இலங்கைச் சோனகர்கள்” என்று எம்மைப் பற்றி குறிப்பிடப்படுகிறது! வெளியிலிருந்து நாம் வந்திருந்தால் எதற்காக “இலங்கைச் சோனகர்” என்று அழைக்க வேண்டும்? (இங்கு தான் நாம் பேசும் மொழி குறித்த ஆய்வு அவசியமாகிறது)

3-லெமூரியாக் கண்டம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உலகில் கண்டங்கள் பிரிவதற்கு முன் ஒரே கண்டமாக இருந்ததை லெமூரியாக் கண்டம் என்று அழைப்பார்கள். நூஹ் நபியின் காலத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின்னரே கண்டங்கள் துண்டு துண்டுகளாகப் பிரிந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சில சொல்லாடல்கள் “இலங்கை மனித குலத்தின் பூர்வீக பூமியாக இருந்திருக்குமோ” எனும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. காரணம்:

01. நூஹின் கப்பலில் ஏறியதால் “மரக்கலாயர்கள்” என்று ஏன் அழைக்கப்பட்டிருக்கக் கூடாது?

02. நேவி என்ற வார்த்தை; கடற்படை எனும் அர்த்தத்தைத் தரும் நேவி. இது நோவா எனும் வார்த்தையுடன் தொடர்புபடுகிறது. நாவா என்பது இன்னும் கப்பலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.

03. இலங்கை முஸ்லிம்களுக்கு “மூர்” என்று சொல்லப்படுவது லெமூர் வெடிப்புடன் தொடர்புபட்டதா? போன்ற கேள்விகள் “இலங்கை மனித குலத்தின் பூர்வீக பூமியாக இருந்திருக்குமோ” எனும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. சோனகர் என்ற வார்த்தை “சுவனகர்” என்ற சொல்லின் மருவிய பதமே! சுவனகரில் இருந்து பாம்பை வழிப்பட்டவர்களை “நாகர்” என்று அழைத்தார்கள். சோனக மொழி என்பது 50 மொழிகளின் சொற்கள் உள்வாங்கப்பட்டும். பல சொற்களை பிற மொழிகளுக்கு வழங்கியும் உள்ள ஒரு பழமை மொழி. பௌத்தர்களின் பழைய வரலாற்று இலக்கியங்களில் “யோன” என்று ஒரு இனம் அழைக்கப்படுகிறது. “யோன” என்றால் அது “சோன” எனும் சொல்லிலிருந்து மருவிய வார்த்தையே! இன்று வரை இலங்கையின் பழைய ஆவணங்களில் “யோனக மினிசு” எனும் பதப் பிரயோகம் முஸ்லிம்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது “சோனகர்” என முஸ்லிம்கள் ஆதிகாலத்திலிருந்து அழைக்கப்பட்டதைக் குறிக்கிறது. மஹா வம்சத்தின் மூல மொழியான பாலி மொழியிலும் “யொன்” என்று ஒரு இனத்தைக் குறித்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

சோனக மொழி என்பது எழுத்தை இழந்த ஒரு மொழி ஆகும். சோனக மொழியைப் பாதுகாக்க அறபித் தமிழைப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக தத்ரீஸுல் குர்ஆனைக் குறிப்பிடலாம்.

4-முஸ்லிம்கள் வந்தேறு குடிகளென்றால் கரையோரங்களில் மாத்திரமே இருந்திருக்க வேண்டும். தனித் தனி சிட்டிகளில் பெருந்திரளமான முஸ்லிம்கள் திடீரென எப்படித் தோன்றினார்கள்? அக்குரனை எப்படி வந்தது? காத்தான்குடி எப்படி வந்தது? எம்மைச் சோனி என்று யாராவது அழைத்தால் நாம் கோபிக்கக் கூடாது. நபியவர்கள் முஸ்லிமாக இருந்தாலும் தன்னை குரைஷி என்று சொல்வதில் சங்கடப்படவில்லை.
5- வில்ஹெம் ஹைகர் என்பர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர். இலங்கை குறித்து அவர் சிறப்பான வரலாற்றாய்வு ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் அவர் “ஆரியர் இலங்கைக்கு வருமுன்னரே அரேபியர் இங்கு குடியிருந்தார்கள்” என்கிறார். இன்னும் “கி.மு. 453 யமனியர் குடியிருந்தனர்” என்றும் சொல்கிறார்.

06 கலாநிதி பாலேந்திரா என்பவர் (முன்னால் அகழ்வாராய்ச்சியாளர்) அண்மையில் இலங்கை அரசுக்கு ஒரு பரிந்துரை ஒன்றை செய்திருந்தார். அதாவது “கடந்த 2000 ஆண்டுகளாக அரேபியர் இலங்கையில் குடியிருப்பதால் வேடரை பழங்குடி என்று சொல்வதைப் போன்று அறபிகளையும் இந்த நாட்டின் பழங்குடிகள் என்று சொல்ல வேண்டும்”

07. இத்தாலி நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் பிளினி ” கிறிஸ்தவ ஆண்டு தொடங்கு முன்னரே அரேபியர் இலங்கையில் குடிகளாக வாழ்ந்தனர்” என்கிறார்.

8-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பரவலாக்கத்திற்கு பல சான்றுகள் உண்டு. மட்டக்களப்பு மாண்மியம் எனும் நூல் 1962ம் ஆண்டில் நடராசா என்பவரால் தொகுத்து மட்டக்களப்பு மாவட்ட கலாச்சாரப் பேரவையால் வெளியிடப்பட்ட புத்தகம். மட்டக்களப்பைப் பற்றி ஏராளமான வரலாற்று நூல்கள் இருந்தாலும் இதற்குத் தான் முக்கியத்துவம் அதிகம். காரணம் இந்நூல் இப்பிரதேசத்தில் உலவிய ஏட்டுப் பிரதிக்ளின் தொகுப்பு நூலாகும். இந்நூல் இன்று வரை அருங்காட்சிய சாலையில் ஓலை ஆவணமாக உள்ளது.

9-முக்குவர் திமிலர் என்று இரண்டு இனம் கிழக்குப் பகுதியில் இருந்திருக்கிறார்கள். முக்குவர் விவசாய சமுதாயமாகவும் திமிலர் மீன்பிடித் தொழிலாளிகளாகவும் இருந்துள்ளார்கள். திமிலர்களின் ஆரம்ப குடியேற்ற இடம் திமிலை தீவு. திமிலரால் அதிகம் மீன்கள் பிடிப்பப்பட்ட இடமே வலையிறவு. அதைத்தான் நாம் வலையறா என தற்போது அழைக்கிறோம். திமிலரும் முக்குவரும் சண்டையிட்டார்கள். அப்போது அங்குள்ள முஸ்லிம்களிடம் முக்குவர் உதவி தேடினார்கள். முஸ்லிம்கள் எப்போதும் நல்ல வீரத்துடன் இருந்ததால் திமிலரை திருகோணமலை எல்லையாகிய வெருகல் வரை துரத்தப்பட்டனர். திமிலரை விரட்டிவிட்டு வெற்றியுடன் இரு பகுதிகளிலிலிருந்தும் திரும்பிய வீரர்கள் சந்தித்த இடம் சந்திவெளி எனப்படுகிறது. இன்று கிழக்குப் பல்கலைக்கழகம் காணப்படும் இடமாகிய வந்தாறுமூலை (வந்து ஆறிய மூலை) வெற்றி வீரர்கள் இளைப்பாறிய இடமாக அர்த்தப்படுகிறது. அந்த வீரர்களுக்கு முக்குவப் பெண்களை திருமணம் செய்து கொடுத்தார்கள். அப்போதைய முஸ்லிம்களின் தலைவராக “பட்டாணி” என்பவர் இருந்துள்ளார். (மட்டக்களபு மாண்மியம்)

இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்புக்கள்

1-போர்த்துக்கேயரைத் துரத்துவதற்காக மாயாதுன்னை மன்னனுக்கு கள்ளிக்கோட்டை மன்னனின் படை உதவியைப் பெற்றுக்கொள்ள முஸ்லிம்கள் அனுப்பப்பட்டார்கள். போர்த்துக்கேயருக்கு எதிராக டச்சுக்காரரின் உதவியைப் பெறுவதற்காக கண்டிய மன்னன் முஸ்லிம்களையே அனுப்பிவைத்தான்.

2-அக்குறனை என்ற ஊர் எப்படி முஸ்லிம் ஊராக மாறியது தெரியுமா? போர்த்துக்கேயரை எதிர்த்துப் போராடுவதற்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்புக் காரணமாகவே கண்டி மன்னன் இராஜசிங்கன் நன்றிக் கடனாக அக்குறனையில் முஸ்லிம்களைக் குடியேற்றினார். கண்டிய மன்னர்களின் தூதுவர்களாகவும் முஸ்லிம்கள் செயற்பட்டனர். ஒல்லாந்தரைத் துரத்தியடிப்பதற்காக (கர்நாடக) நாவாப் முஹம்மதலியிடம் உஸ்மான் லெப்பே மௌலா முகாந்திரம் என்பவரை கண்டி மன்னன் தூதராக அனுப்பினான்.ஆங்கிலேயரின் தாராண்மைக் கொள்கை முஸ்லிம்களைத் தேசிய அரசியலிலும் பங்குகொள்ள வைத்தது.

3-1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட நிரூபண சபையில் 1889 முதல் முஸ்லிம்களும் அங்கம் வகித்தனர்.

4-1865ல் அறிமுகமான மாநகரää உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்லிம்களுக்குப் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

5-1919ல் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் உபதலைவர்களில் ஒருவராக இளம் பட்டதாரி .டீ பீ ஜாயா தெரிவானதோடு முஸ்லிம்களும் சுதண்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

6-டொனமூர்,சோல்பரி யாப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களிடம் யாப்புச் சீர்திருத்த சட்டக் கோரிக்கைகளை முஸ்லிம்கள் முன்வைத்தனர்.

7-சட்ட சபைக்கான முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் கவர்னரால் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதை எதிர்த்து படித்த வர்க்கத்தினர் சிலர் அம்மூவரும் மக்களால் தெரிவு செய்யப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தபோது இக்கோரிக்கை கவர்னரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் முழு இலங்கையையும் தழுவிய தேர்தல் நடாத்தப்பட்டது. இத்தேர்தலில் முஹம்மது மாகான் மாக்கார்,அப்துல் காதர், டீ பீ ஜாயா ஆகிய மூவரும் 1924ல் தெரிவு செய்யப்பட்டனர்.அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பு ஏராளமானவை. ஆனால் இன்று சொகுசுக்கு அடிமையாகிப் போனார்கள். எமக்கு இந்நாட்டில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உண்டு.

இச்சூழலில்தான் இன்ஷா அல்லாஹ் 2015 ஜனவரி எட்டாம் திகதி “ஜனாதிபதித் தேர்தல்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் ஊடாக நாம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?
ஆட்சி மாற்றமா? அல்லது ஆட்சி முறையில் மாற்றமா? ஆயிரம் பேர் மாறி மாறி ஆட்சிக்கு வரலாம். ஆனால் ஆட்சி முறை மாறுமா? இது தான் சிந்திக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் பல பிரச்சினைகளுக்கு அது தீர்வாகும்.

மஹிந்தவின் ஆட்சியில் பல நல்ல விடயங்கள் நடந்திருக்கிறது. மறுக்க மாட்டோம். (யுத்தம்,பயண வசதிகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் பல தீமைகளையும் இந்த அரசு செய்திருக்கிறது. நன்மையை விட தீமையே அதிகமாக உள்ளது. முஸ்லிம்களின் மத உரிமை,வழிபாட்டு உரிமை,பொருளாதார உரிமை போன்றன இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அரச உத்தியோகங்களில், பல்கலைக்கழக நுழைவில், காணிப் பங்கீடுகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் ஹிஜாப்,இஸ்லாமிய வங்கி முறைமைகள்,ஹலால் உணவு முறை என்பன கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. முஸ்லிம்களின் கடவுற்கொள்கையும்,வேதப் புத்தகமான திருக்குர்ஆனும் இனவாதிகளால் இம்சிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் தப்புப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத காலத்தின்போதுகூட நடந்திராத அளவிற்கு இனவாதம் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது மோசமான வன்முறைகளாகவும் மாறத் தொடங்கியிருக்கின்றது. அளுத்கம வன்முறை இதற்கு நல்ல உதாரணமாகும்.

இனவாதத்தைப் பேசுகின்றவர்களுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்படும். அதேவேளை சமாதானம் பற்றிப் பேசுகிறவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். வன்முறையை ஏற்படுத்தும் இனவாதிகளைப் பாதுகாப்பதற்கென்றே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அளுத்கமயில் கண்டோம். பொதுபல சேனாவின் காரியாலயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே திறந்து வைத்தார். ஆக இந்நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இந்த அரசால் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை.
ஊழலும், மோசடிகளும் இந்நாட்டில் உச்சத்தில் இருக்கிறது. குடிமக்கள் மீதான கடன் சுமைகளையும் வரிச் சுமைகளையும் அரசாங்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆக மொத்தத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையால் ஜனநாயக உரிமைகளும் அரச நிருவாகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில் “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை” பற்றி சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவினதும் பிரான்ஸினதும் அரசியலமைபில் இரண்டிலுமுள்ள சாதகமான நிறைவேற்று அதிகாரங்களை உள்ளடக்கி உலகில் எங்குமே இல்லாத சர்வாதிகார ஜனாதிபதியை தோற்றுவிக்கும் அரசியலமைப்பை 1978 இல ஜே ஆர் ஜெயவர்த்தனா அறிமுகம் செய்தார்.ஆனால் அந்த நாடுகளில் உள்ள செனட் லெஜிஸ்லேசர் ஏனைய பொது சேவைகள் இராணுவ காவல் துறை தேர்தல் நீதித்துறை ஊடகம் என்பவற்றின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துகின்ற உத்தரவாதங்கள் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்றவுடன் சகல சமாதான முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை ஒழிப்பதென முடிவொன்றை எடுக்கவும் நிறைவேற்று அதிகாரங்களை உச்ச அளவில் பயன்படுத்தினார். ஆனால் பல கட்டங்களில் இந்த அதிகாரத்தை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்தார்.

01. திவி நெகும போன்ற சட்ட மூலங்களை அறிமுகப்படுத்தி மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

02. வடகிழக்கில் இராணுவ மயமாக்கல்

03. பல்வேறு நோக்கங்களுக்காக காணி சுவீகரிப்பு

04. திட்டமிட்ட குடியேற்றங்கள்

05. பிரதம நிதியரசர் பதவி இழந்தமை

06. பிரதான இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

07. 17வது திருத்தச் சட்டத்தில் கைவைக்கப்பட்டது

“நிறைவேற்று அதிகாரங்களினை மட்டுப்படுத்தி பொதுசேவைகள் காவல்துறை நீதித் துறை தேர்தல் கமிஷன் போன்றவை சுயாதீனமாக செயற்பட வேண்டுமென்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மூலமே 17வது திருத்தச் சட்டமாகும்.

அதனை வலிமையற்றதாக்கி 18ஆவது திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது மாத்திரமில்லாமல் தனது சர்வாதிகார பதவிக்காலத்தை நீடித்துக் கொள்ளும் நோக்கில் இரண்டுதடவைக்கு மேலும் ஜனாதிபதித் தேர்தலில் பதவியில் இருப்பவர் போட்டி இடுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டார். இதுதான் உச்ச கட்டமாகும். இதனால் தான் சொல்கிறோம். ஆட்சி மாற்றத்தை விட ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும்.

8-இன்று இந்நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதிகார துஷ்பிரயோகங்கள்> நிர்வாக சீர்கேடுகள்> குடும்ப ஆட்சியை மையப்படுத்திய சர்வாதிகாரப் போக்கு> பொருத்தமற்ற பொருளாதார நடைமுறைகள்> ஊடகச் சுதந்திரமின்மை கலாச்சார நெறிபிறழ்வுகள்> சிறுவர் துஷ்பிரயோகம்> பாலியல் வன்கொடுமைகள்> போதைவஸ்துப் பாவனை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்று இந்நாட்டு மக்களை பாடாய்ப் படுத்தும் பாதகங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் தான் சொல்கிறோம். ஆட்சி மாற்றத்தை விட ஆட்சி முறையில் மாற்றம் வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த தற்போது களமிறங்கியுள்ள பொதுவேட்பாளர் மைத்திரி குறித்து சில அவதானங்களைப் பார்ப்போம்.

மைத்திரி குறித்து எமது அவதானங்கள்

1-மைத்திரி வெளியிட்ட முதலாவது ஊடக அறிக்கையில் “17 வது அரசியல் ஷரத்தை மீளக் கொண்டு வருவதோடு 18 வது ஷரத்தை நீக்குவேன். உண்மையான ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பேன். 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பேன். முறைகேடுகலற்ற தேர்தல் நடைமுறையை தோற்றுவிப்பேன் பொலிஸ் துறையில் நிலவும் வெளித்தலையீடுகளை முடக்குவேன் அரச ஊழியர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சு10ழலை ஏற்படுத்துவேன். அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடி, குடும்ப ஆதிக்க ஆட்சி போன்றவற்றை களையகற்றுவேன்” என்கிறார்.

இந்த விடயங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இவைதான் இந்நாட்டை சூழ்ந்திருக்கும் அடிப்படை பிரச்சினைகளா? இதுவே விடைகாணப்பட வேண்டிய விடயமாகும்.

ஆட்சி பீடம் ஏறிய ஒவ்வொரு அரசும் தனது வாக்கு வங்கிகளை நிரப்பி ஆட்சிக் கதிரையை தக்கவைப்பதற்காக அவ்வப்போது கையில் எடுத்த மிகப்பெரிய ஆயுதம் ‘இனவாதம் – மதவாதம்’ எனும் ஆயுதமே. ஆட்சி பீடம் ஏறியவுடன் பெரும்பான்மையினரை திருப்திபடுத்துவதற்காக சிறுபான்மை இனங்களின் உரிமைகளை பலிகடாவாக்கும் நாரத்தனத்தையே அனைத்து ஆட்சி பீடங்களும் அரங்கேற்றியுள்ளன.

01. 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய தனிச்சிங்கள மொழிச் சட்டம் 30 வருட கோர யுத்தத்தையே இந்நாட்டுக்குப் பரிசாகத் தந்தது.

02. 1983 ஆம் ஆண்டு ஜயவர்தனவின் ஆட்சியில் நடந்தேறிய தமிழின ஒழிப்பு ‘கருப்பு ஜூலை’ யாக வரலாற்றில் இடம்பிடித்தது.

03. சந்திரிக்காவின் ஆட்சி காலத்தில் மாவனல்லையில் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் பொருளாதாரம் இனவாதத் தீயை உஷ்ணப்படுத்தியது.

04. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட ‘சிங்கள உருமய’ எனும் இனவாத அமைப்பின் செயற்பாடுகள் முஸ்லிம்களுக்கெதிரான காழ்ப்புணர்வுத் தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்தது.

5-ஊழலை ஒழிப்பதிலும் நிர்வாகச் சீர்கேடுகளை அழிப்பதிலும் கரிசனை காட்டும் கூட்டணிக் கட்சிகள் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதத்தை வேரடி மண்ணோடு களைதல் குறித்து கருத்துப் பதியாமை எதிர்காலத்தை குறித்த ஐயப்பாடுகளையே எழுப்புகின்றன. அதிலும் பிரதானமாக இனவாதத்தை இந்நாட்டில் விதைப்பதில் பாரிய பங்கு வகிக்கும் ஹெல உருமய எதிரணியில் இணைந்துள்ளமையும் பொதுபலசேனா இது வரை எதிரணியை எதிர்த்து கடுமையாக விமர்சிக்காமையும் ஹெல உருமயவுக்கும் பொது பலசேனாவுக்குமிடையில் இன்னும் திரைமறைவுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றமையும் மஹிந்தவை வீழ்த்துவதற்காக எந்த அமைப்பையும் உள்வாங்கும் மனோபாவத்தில் எதிரணி இருப்பதுவும் கூட்டணி பக்கம் பொதுபலசேனாவும் கைகோர்க்குமோ எனும் ஐயத்தை எழுப்பாமலில்லை.

அவ்வாறு ஒரு நிகழ்வு நடக்குமாயின் மஹிந்தவின் இடத்தில் மைத்திரி எனும் ஆட்சியாளார் மாறலாமே தவிர இனவாதத்தை கக்கும் செயற்பாடுகள் ஒருபோதும் மாறாது என்பதுவே உண்மை.
ஆதலால் மாற்றங்களை அடுத்தவர்கள் ஏற்படுத்தும் வரை காத்திருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் மாற்றத்தின் பங்காளர்களாய் இருப்பவர்கள் சாதனையாளர்கள். வாக்கு என்பது “சாட்சியமாகும்” அந்த சாட்சியத்தை நேர்மைக்கும் மனித குல நலனுக்கும் பயன்படுத்துவதுதான் இறை விசுவாசிகளின் பண்பு. தேர்தல் காலங்களில் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

01. ஊர்வலங்களில் கலந்து கொள்ளாதீர்கள்!
02. எவரையும் ஆதாரச் சான்றில்லாமல் விமர்சிக்காதீர்கள்!
03. கள்ள வாக்குகளை அளித்து விடாதீர்கள்!
04. நடப்பு அரசியல் விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்! அதன் மூலம் விழிப்புணர்வு பெறலாம்.
05. தஃவா அமைப்புக்கள் அரசியல் தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டை வெளியிடுங்கள்!
01. தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினராகிய நாம் நேரடியாக தேர்தலில் இறங்க மாட்டோம்.
02. யாருடனும் கூட்டுச் சேற மாட்டோம்.
03. ஆதரிப்பவர்களின் மேடைக்கோ, ஆதரிப்பவர்களை எமது மேடைக்கோ கொண்டு வர மாட்டோம். இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் தேர்தல் காலங்களில் நமது ஜமாஅத் எப்படி செயலாற்றும் என்பதை வெளியிடவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்கு மைத்திரி பால சிறிசேனா அவர்களுக்கே அமையும். கடந்த கால அரசாங்கத்தில் ஏற்பட்ட அநீதிகளை கவனத்திற் கொண்டும் ஆட்சிமுறையில் மாற்றம் மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அடிப்படையாக வைத்து இம்முடிவை நாம் எய்தியுள்ளோம். மைத்திரி அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது ஸஹ்றான் மௌலவியுடைய தனிப்பட்ட முடிவு என சிலர் நினைக்கலாம். அது தவறாகும். இது எமது ஜமாஅத்தினுடைய முடிவே தவிர ஸஹ்றான் மௌலவியுடைய தனிப்பட்ட முடிவல்ல என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒவ்வொருவரும் நிதானமாக சிந்தித்து இது விடயத்தில் முடிவெடுக்குமாரு வேண்டுகிறோம்.

Published by

Leave a comment