வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

2014-12-12 16.59.37 asmin– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

வவுனியா: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2014) இடம்பெற்றது.

வவுனியா, பண்டாரிக்குளம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல்மதார் விளையாட்டுக்கழகம், ஸம் வித் யூத் விளையாட்டுக்கழகம், வானவில் விளையாட்டுக்கழகம், அரபியன் போயிஸ் கழகம் ஆகிய விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவித்திட்டங்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

2014-12-12 16.59.37 asmin

Published by

Leave a comment