‘திஸ்ஸவுக்கு ஒரு கப் கோப்பி, ரணிலுக்கு ஒரு டீ போதும்’

mahindaஅனுராதபுரம்: எங்கள் கட்சி செயலாளர் எதிர்கட்சிக்கு போனார் அதற்கு பதிலாக ஐ.தே.க பொது செயலாளரை எம் பக்கம் மாற்றினோம் இப்பொழுது அவர் சுகாதார அமைச்சரானார். அவருக்கு நான் ஒரு கப் கோப்பியை தான் கொடுத்தேன் எம் பக்கம் வந்துவிட்டார். இதே போல் ரணிலுக்கு ஒரு கப் டீயை கொடுத்தால் அவரும் எம் பக்கம் வந்து விடுவார் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவம் பொது மக்களை கொலை செய்யவில்லை மக்கள் கூறியபடி யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தேன். நாட்டை அபிவிருத்தி செய்ய சொன்னார்கள் அதை செய்தேன். எனது கை இரத்தக்கறை படிந்த கையல்ல அப்படி இரத்தக்கறை பட்டால் கையை வெட்டிவிடுவேன். எனது அடுத்த இலக்கு அனுராதபுர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதே எதிர் வரும் காலங்களில் நாட்டை ஒற்றுமையான பாதையில் கொண்டு செல்வதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.

Published by

Leave a comment