இலங்கை முஸ்லிம்கள் ‘இதனை’ச் செய்திருக்க வேண்டும்: ஆனால் செய்யவில்லை…

muslim politicians– முஸ்லிமீன்

கொழும்பு: தேர்தல் காலம் வந்ததும் அரசியல்வாதிககளை இறைவன் அந்தஸ்த்தில் (நஊதுபில்லாஹ்) வைத்துபார்ப்பது எமது முஸ்லிம்களிடத்தில் இருந்துவரும் அறியாமைகளில் ஒன்றாகும்.இவ்வளவு ஓர் நவீனமான சமூக வலைத்தள யுகத்திலும் இலங்கையின் தற்போதய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இன்னும் எதிர்பார்த்திருப்பது முஸ்லிம்களின் அறியாமைக்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது.

இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு தற்போதய குடும்ப ஆட்சிக்கு இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சோரம்போய் இருக்கின்றனர்.

கடந்த 2012 இல் இருந்து இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவந்த பொதுபலசேனா அமைப்புக்குப் பின்னணியில் கோட்டபாயவின் கைவரிசை இருந்துவருவது மறக்க முடியாது.

‘கிறிஸ்’ மனிதன் எனும் மர்ம மனிதர்களை இராணுவ, பொலிஸ் ஆதரவுடன் முஸ்லிம் பிரதேசங்களில் இறக்கிவிட்டு, எமது பெண்களை அச்சுறுத்திவந்த விளையாட்டை, அப்பிரதேச மக்கள் கையும் மெய்யுமாகப் பிடித்து, நாலு ‘சாத்து’ சாத்தியதும், உடனடியாக கிறீஸ் மர்ம மனிதர்கள் வாபஸ் வாங்கப்பட்டனர்.

இதனையடுத்து அரசாங்க ஆதரவுடன் இலங்கை முஸ்லிம்களை எதிர்கக , பொதுபல சேனா அமைக்கப்பட்டது.

அல்குர்ஆன் விமர்சிக்கப்பட்டதுடன், அல்லாஹ்வை கேலி உருவம் அமைத்து வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம்,

அதன் பின்னர் தம்புள்ளைப் பள்ளிவாயல் உடைப்பும் பறிப்பும்,

காலம் காலமாகப் பேணிவந்த ஹலால் முத்திரை அகற்றல்,

மஹியங்கனை உட்பட ஏனைய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாயல் மற்றும் மத்ரஸா மீதான தாக்குதல்கள்

அழுத்கம, தர்ஹாடவுண் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசத் தாக்குதல்கள்,

அனைத்தும் மஹிந்த அரசாங்கத்தின் குடும்ப ஆட்சியில் மேற்கொள்ளப்ட்ட சம்வங்களாக அமைகின்றன.

muslim politicians

இத்தனை சம்பவங்களிலும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்காமல், தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள இரட்டை வேடம்போட்ட இத்தகைய பாராளுமன்ற ஜனாஸாக்களை இந்த முஸ்லிம் சமூகம் தனது செருப்பால் அடித்திருக்க வேண்டும்.

ஆனால் முஸ்லிம் சமூகம் இன்றும் பொறுமையாகவே இருக்கின்றது. இந்நிலையில், ஏன் இன்னும் இன்னும் இத்தகைய அரசியல் வியாபாரிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்க்க வேண்டும்?

சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெரும் முஸ்லிம் உறுப்பினர்கள் இதுவரைக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு எதனைச் செய்துள்ளனர்? மாறாக,

ஒவ்வொரு அமைச்சர்களும், பிரதியமைச்சர்களும் நல்ல சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
தங்களது பிள்ளைகளை உயர் பாடசாலைகளிலும், வெளிநாடுகளிலும் படிப்பிக்கின்றனர்.

தனக்கென்றும், தனது குடும்பத்திற்கென்றும் தனி வியாபாரங்களை அமைத்துக் கொண்டனர்.

அரசாங்க சலுகைகளையும், கொண்ரக்ட் கொமிசன்களையும் பெற்று, குறைந்தது தனது 3 பரம்பறை உட்கார்ந்து திண்ணக்கூடிய அளவுக்கு சொத்து சுகத்தை அமைத்துக் கொண்டார்கள்.

இத்தகையவர்களே மீண்டும் ஏன் இந்த முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருக்கின்றது? உங்கள் வாக்குகளால் இவர்களின் வர்த்தகத்தை முன்னேற்றப் போகின்றீர்களா?

இவ்வளவு நவீனமான அறிவுள்ள புத்திஜீவிகள் நிறைந்த முஸ்லிம் சமூகத்தில் ஏன் புதியவர்கள் அரசியலில் களமிறங்க முன்வரக்கூடாது?

ஏன் இத்தகைய சமூக விரோதிகளை தோற்கடிக்கச் செய்யக்கூடாது?

அழுத்கம எரியும் போது 4 நாட்கள் உறங்கியவர்கள், உயிர்நீத்த சகோதரர்களின் ஜனாஸாக்களுக்கும் வரவில்லை! பொருமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். பொறுமையாக இருந்ததால்தான் முஸ்லிம்கள் வீழ்த்தப்பட்டனர். பொறுமை மீறியிருந்தால் பல நூறு அன்னிய சடலங்கள் வீதியில் நாற்றமெடுத்திருக்கும்.

கலவரத்தைத் தடுக்க வக்கில்லாதவர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமாக வால்பிடிப்பதால் பொறுமை என்ற வார்த்தையை மாத்திரம் முஸ்லிம் சமூகத்துக்கு கூறிவிட்டு மறைந்து விடுகின்றார்.

அழுத்கமை சம்வத்திற்கு இலங்கை முழுவதிலுமுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஹர்த்தாலை தடுப்பதற்கு எமது பாராளுமன்ற ஜனாஸாக்கள் என்ன பாடுபட்டனர் என்பதை இந்நேரத்தில் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனாலும், அல்லாஹ்வின் உதவியால் இலங்கை முஸ்லிம்களின் ஒற்றுமையால் ஹர்த்தால் வெற்றியடைந்தது. பொதுபலசேனா ஆடிப்போனது!! மூக்குடைபட்டனர் தடுக்க நினைத்த எமது முஸ்லிம் அரசியல் பயல்கள்!

நாங்கள் சிறுபான்மையினர். எனவே நாங்கள் பெரும்பான்மையை சார்ந்தே போகவேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளே மந்திரத்தை எங்கள் மீது தெளித்து வருகின்றனர். சிறுபான்மையின் வாக்குகள் இல்லாமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

கிரிக்கட்டை இரசிப்பதற்கு மட்டும் நாங்கள் இலங்கையர்கள் என்ற உணர்வு எங்களுக்குள் வருகிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஏற்படும்போது மாத்திரம் நாங்கள் சிறுபான்மையினர் எதுவும் செய்ய முடியாது என மந்திரிக்கப்பட்டிருக்கின்றோம். சில வேளை இது எங்கள் நாடு இல்லை என்றும் இவர்களால் நினைக்கத் தோன்றுகிறது.

சிறுபான்மையாக இருந்தாலும் இலங்கை எங்கள் நாடே! எங்களுக்குரிய உரிமையைப் பெற்றுக்கொள்வது கடமை.

எனவே, இதுவரை காலமும் பாராளுமன்ற கதிரைகளில் அமர்ந்து, முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து, தங்களது வியாபாரங்களை விரிவாக்கி, சொத்துக்களைக் குவித்து, சுகபோகங்களை ஏப்பமிடும் போலி முகங்களை கலைந்தெறிந்து புதிய முகங்கள் பாராமன்றம் செல்ல இலங்கை முஸ்லிம் இளைஞர்கள், ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

ஒவ்வொரு பிரதேசங்களிலும் படித்த, பொதுசேவையிலுள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்.
அதற்கான அடிப்படையே ஆட்சி மாற்றம். ஊவா முஸ்லிம்களின் ஒற்றுமையே முதன்முதலாக ஆளும் அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்தது.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம். புதிய கூட்டணியும் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், நாங்கள் மீண்டும் ஆட்சியை மாற்றுவோம்-இன்ஷாஅல்லாஹ்!

இலங்கை முஸ்லிம்களின் இலட்சிய அணி,
கொழும்பு

Published by

One response to “இலங்கை முஸ்லிம்கள் ‘இதனை’ச் செய்திருக்க வேண்டும்: ஆனால் செய்யவில்லை…”

  1. Please taka a big chapple to slam this Khafirs

Leave a comment