ஏறாவூர்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏறாவூரின் அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் வினியோகிக்கப்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான துண்டுப்பிரசுரம் தொடர்பில் சமகால அரசியல் நிலமைகளில் அரசியல் தலைமைத்துவங்கள் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க எப்பேற்பட்ட முன்னெடுப்புக்களை முன்னெடுக்கப்போகின்றார்கள் என்பதனை ஏறாவூர் முஸ்லிம் சமூகம் உன்னிப்போடு அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
காரணம் ஏறாவூர் முஸ்லிம் மக்களை குறிப்பிட்ட நிலப்பிரதேசத்துக்குள் முடக்குவதற்காக திட்டமிடப்பட்ட முறையில் பிற அரசியல்வாதிகளினாலும், அவர்களின் அனுசரனையுடன் அரச அதிகாரிகளினாலும் முன்னெடுக்கப்படும் நடவெடிக்கை தொடர்பில் ஏறாவூர் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டியே இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் இருக்கின்ற முஸ்லிம் ஊர்களில் ஏறாவூர் மிகக் குறைந்த வாக்கு வங்கியினை கொண்டிருக்கின்றது. ஆனால் மிகப்பெரிய அரசியல் பலத்தினை கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத் தவிசாளராகவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகவும் பஸீர் சேகுதாவூத்தும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரத்தித் தலைவராகவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராகவும் இருக்கின்ற ஹபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய உறுப்பினராகவும் இருக்கின்ன எம்.எஸ் சுபைர், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதியின் அமைப்பாளராகவும் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவோடும் இருக்கின்ற ஏறாவூர் நகர முதல்வர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் இப்பிரச்சினை தொடர்பில் தங்களுக்குள்ள அரசியல் பலத்தினை பயன்படுத்தி ஏறாவூர் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எத்தகைய நடவெடிக்கையை முன்னெடுப்பார்கள் என்பது கேள்வியாகவே இருக்கின்றது.
Published by


Leave a comment