கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என சகலருக்கும் அபிவிருத்தியின் பலன் சென்றடையும் வகையில் தேசிய ஒற்றுமையை விஸ்தரிக்க வழியமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி என்று எனது மூன்றாவது கொள்கை பிரகடனத்தினதும் தெளிவான நோக்கம் அது தான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனை என்பது தேர்தலின் பின்னர் மறந்து விடும் ஆவணமல்ல என்பதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர் நாட்டை ஸ்தீரத்தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதா ஸ்தீரத்தன்மையின்றி பின்னோக்கிச் செல்வதா என மனசாட்சியை தொட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார்.
‘மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழி’ மூன்றாவது கொள்கை பிரகடனம் நேற்று சுபநேரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. கொள்கை பிரகடனத்தின் பிரதிகளை ஜனாதிபதி முதலில் மத தலைவர்களுக்கு வழங்கியதோடு பின்னர் கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர்க ளுக்கும் வழங்கி வைத்தார்.
சகல தரப்பினரதும் பங்களிப்பு டன் புதிய அரசியலமைப் பொன்றை உருவாக்க அடித்தளமிடுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனது கரங்களினால் எந்த ஒரு தேசத் துரோக ஒப்பந்தமும் கைச்சாத்திட்டத்து கிடையாது எனவும் தனக்குள்ள ஒரே ஒப்பந்தம் மஹிந்த சிந்தனை மட்டுமே எனவும் இங்கு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் மீது அன்பு செலுத்தும் மக்களை ஒன்றிணைத்து நாம் மஹிந்த சிந்தனையை வெளியிட்டோம். நாடு துண்டாடப்படும் நிலை அண்மித்திருந்த சமயத்திலேயே அன்று அதனை மக்களுக்கு சமர்ப்பித்தோம். எமது வளங்கள் சொற்ப விலைக்கு விற்று நாட்டு மக்களை தமது மண்ணிலே வீடுகளில் வாழ்பவர்களாக இருந்த யுகத்திலே நாம் இதனை வெளியிட்டோம்.
நாட்டிற்கு கெளரவமான சமாதானத்தை கொண்டு வருவதாக அன்று வாக்களித்தேன். நாட்டைக் காட்டிக் கொடுத்து மண்டியிட்டு பெறும் சமாதானமல்ல அது. 30 வருட யுத்தத்திற்கு 4 வருடத்தில் முடிவு கட்டினேன். அதன் பின்னர் மக்கள் மரண அச்சமின்றி வாழும் நிலை உருவாக்கப்பட்டது.
2010 மஹிந்த சிந்தனை தொலை நோக்கினூடாக வென்ற சுதந்திரத்தை பாதுகாத்து சுதந்திரத்தை முழுமையாக தேசத்தின் நலனுக்கு பயன்படுத்த வாக்களித்தோம்.
எமது நாட்டிற்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்கிறோம். 68 வீதத்திற்கு குறைவாக இருந்த மின்பாவனை 99 வீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. தனிநபர் வருமானம் 1200 டொலரிலிருந்து 4000 டொல்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் பல இனத்தவர்கள் வந்து செல்லும் நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் வாக்குறுதிகள் என்பது சில மாதங்களில் மறந்து விடும் ஆவணமாக இருந்தது. ஆனால் மஹிந்த சிந்தனை அவ்வாறு மறந்து விடும் ஆவணமல்ல என்பதை முதற் தடவையாக நாம் நிரூபித்தோம். இலங்கை வரலாற்றில் இது விசேட அனுபவமாகும்.
நாம் மீண்டும் மின்சாரம், நீர், பாதை கள் வறுமை குறித்து வாக்குறுதி வழங் கத் தேவையில்லா நாட்டை கட்டியெழுப் பியுள்ளோம். உட்கட்டமைப்பு வசதி குறித்து வாக்குறுதி வழங்கத் தேவை யில்லை. அவை குறித்து வாக்குறுதி அளிக்க தேவையில்லை.
ஒரு கெசினோ அனுமதிப்பத்திரமோ மதுபானக் கடை அனுமதிப்பத்திரமோ வழங்காத கரங்களே எனக்குள்ளது. என்பதை பெருமையுடன் கூறுகிறேன். ஆனால் பொய் சத்தியத்தை மறைத்துள்ளது.
7 இலட்சமாக இருந்த அரச சேவை தொகை 14 இலட்சமாக அதிகரித்துள்ளோம். மீண்டும் தனியார் மயப்படுத்தலுக்கு வழியமைத்து நாட்டை விற்கும் திட்டத்துக்கு இடமளிக்க முடியாது. அந்தப் பொறுப்பு எனக்கே இருக்கிறது.
புலி பயங்கரவாதத்தை, தோற்கடித்து எமக்கு யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக் கப்படுகிறது. பாரிய அபிவிருத்தி செய் யும் எமக்கு மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. நாட்டை கட்டியெழுப் பும் போது இவை தான் எமக்கு உரிமையாக்கப்படுகிறது.
சிரேஷ்ட இலங்கை மகனான அந காரிக தர்மபாலவுக்கும் மோசடி குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இலங்கரத்ன போன்ற தலை சிறந்த தலைவர்களுக்கும் குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
எமது வளங்களை சொற்பவிலைக்கு விற்றதை தவிர வேறு மோசடி இருக்க முடியுமா இவ்வாறு செய்தவர்கள் தான் மோசமான குற்றவாளிகள் எனவே கண்ணாடி வீடுகளிலிருந்து கல் எறியா தீர்கள். அந்த தேசிய மோசடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்தேன். தனியார் மய மாக்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளேன்.
பயங்கரவாதம் உள்ள நாட்டில் நல் லாட்சி இருக்காது. ஜனநாயகம் இருக் காது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாலே நாட்டில் ஜனநாயகமும் நல்லாட்சியும் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ஜனநாயகத் தினாலே நல்லாட்சி குறித்து பேச முடிகிறது. நாம் நாட்டை காக்கவில்லை யென்றோ நாட்டிற்கு சேவையாற்றவில்லை என்றோ யாராலும் கூற முடியாது.
நாட்டிற்கு துரோகமிழைக்கும் ஒரு ஒப்பந்தம் கூட நான் எனது கைகளினால் கைச்சாத்திட்டது கிடையாது. எனக்கு பல ஒப்பந்தங்கள் கிடையாது. எனக்கிருப் பது ஒரே ஒப்பந்தம் தான். அது மஹிந்த சிந்தனை மட்டும் தான். குடும்ப ஆட்சி குறித்து என் மீது குற்றச்சாட்டினாலும் 2005 ம் ஆண்டு தேர்தலில் அரசியல் குடும்பமொன்றிலிருந்து தான் போட்டி யிட்டேன்.
நாம் எவரும் இதிலிருந்து உழைக்க வில்லை. நாட்டு நலனுக்காகவே அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற் பட்டோம்.
சட்டம் ஒழுங்கை பலப்படுத்தல், லஞ்சம், மோசடியை ஒழிக்கக் கூடிய நிறுவன வலையமைப்பு போன்றே நல்லாட்சி, சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர் அடங்களாக சகலருக்கும் அபிவிருத்தியின் பலன்கள் கிடைக்கும் வகையில் தேசிய ஒற்றுமையை விஸ்தரிக்க முன்னுரிமை வழங்கப்படும். மஹிந்த சிந்தனை உலகை வெல்லும் வழியின் தெளிவான நோக்கும் அதுவே.
மத தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் புத்திஜீவிகள், தொழிற்சங்க தலைவர்கள் சிவில் அமைப்புகள் ஆகியோரின் பங்களிப்புடன் புதிய அரசியலமைப் பொன்றிற்கான ஆரம்பத்திற்கு என்னை அர்ப்பணிப்பேன்.
எமது நாட்டில் மற்றொரு பாரிய மாற்றத்துக்கு நாம் தயாராகி வருகிறோம். வருடாந்தம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாக வேண்டும். உயர்தரம் கற்ற 150,000 பேருக்கு அரச துறையில் தொழில் வாய்ப்பு வழங்க இருக்கிறோம். எமது நாட்டை செல்வச் செழிப்புள்ளதாக மாற்ற வேண்டும்.
எமது நாட்டை உலகில் முன்னேறிய நாடாக தூக்கி வைக்கும் வகையில் எமது மூன்றாவது கொள்கை பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
2005-2010 ல் என்னை நம்பி எனக்கு ஆணையை தந்தது குறித்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2005 போன்று 2010 லும் எனக்கு வாக்களித்து என்னை தெரிவு செய்து நாட்டை வழங்காதிருந்தால் எமது நாட்டின் நிலை எவ்வாறு இருந்திருக்கும். உங்கள் மனங்களிடம் கேளுங்கள். இந்த தேர்தலில் நீங்கள் ஸ்தீரத்தன்மையுடன் முன்னோக்கிச் செல்வதா? இல்லாவிட்டால் மீண்டும் ஸ்திரமற்ற நிலையினூடாக பின்னோக்கி செல்வதா என நீங்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
Published by

Leave a comment