நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால் மூல வாக்கு பதிவு அரசியல் தலையீட்டால் இடைநிறுத்தம்!

stopகொழும்பு: கொழும்பு நாரஹேன்பிட்டி இ.போ.ச பஸ் டிப்போவில் நடைபெற்றுக் கொண்டிருந்த தபால் மூல வாக்கு பதிவு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான குழு அந்த வாக்கு பதிவு நிலையத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தியதே இந்த இடை நிறுத்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு ஊழியர்கள் பலவந்தப்படுத்தப்பட்டதால் இந்த நிலை தோன்றியுள்ளது. முடிவாக இந்த வாக்கு பதிவை ரத்து செய்ய தேர்தல் அதிகாரி தீர்மானித்துள்ளார். தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 41 ஆயிரத்து 831 வாக்காளர்கள் தகுதி ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. இம்முறை தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 41 ஆயிரத்து 831 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.

Published by

Leave a comment