ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பு

hizbullah– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் முகமாக காத்தான்குடி பிரதேசத்திலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மிடையிலான விஷேட சந்திப்பொன்று 22-12-2014 நேற்று திங்கட்கிழமை இரவு காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பெருமளவு அரசாங்க உத்தியோகத்தர்கள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இப் பிரதேச முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இங்கு முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலனிற்கும்,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பல்வேறு சலுகைகளையும் வழங்கி உதவிவரும் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடையப்போகும் வெற்றியில் பங்குதாரர்களாக அரசாங்க ஊழியர்கள் மாற முடியுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவித்தார்.

hizbullah

officers (2)

officers (3)

officers

Published by

Leave a comment