இலங்கை முஸ்லிம்கள் வென்றுவிட்டனர்

Sri Lanka Religious Protestஅரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் செய்தனர் அன்று!

மக்கள் சொல்வதை அரசியல்வாதிகள் செய்கின்றனர் இன்று!!

– இர்ஷாட் ஏ. காதர்

கொழும்பு: சமூகவலைத்தளங்களின் வளர்ச்சி, இலங்கை முஸ்லிம்களின் மனதை உலகுக்கு எடுத்துக்காட்டி வருகின்றன. அது இலங்கை அரசியலில் சமகால ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கள் பல்வேறுவகைகளில் வெளிப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இவ்வளவு காலமும் முஸ்லிம் சமூகம் என்றும் முஸ்லிம் சமூகத்துக்காகவே குரல் கொடுக்கிறோம் என்றும் இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிவந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இதற்காகவே எங்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு தேர்தல் மேடைகளில் கேட்டுக்கொண்டிருந்தனர். மக்களும் கண்களை மூடிக்கொண்டு, வாக்குகளை அளித்தார்கள். ஆனால் 1989 இல் எமது சமூகம் இருந்ததைவிடவும், மிக மோசமான நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கின்றது.

hakeem rishad

1989 இல் துவிச்சக்கர வண்டி வாங்குவதற்கும், தனது வீட்டு மலசலகூட கதவுக்கும் வக்கில்லாமல் இருந்த அரசியல்வாதிகள் இன்று கறுப்புப் பணத்தால் உலகை ஆளும் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்.

எதற்கெடுத்தாலும் கொமிசன். ஓர் வீதி போடுவதென்றால் ஜனாதிபதிக்கு பெரிய வீதம், அமைச்சுக்கு, அரசியல்வாதிக்கு….ஆரம்பித்து, தனது அள்ளக்கைகள் வரைக்கும் கொமிசன் பங்கிடப்படும்.

ஆனால், பொதுமக்களாகிய நாங்கள் அன்று இருந்ததைவிடவும், மோசமான பொருளாதார சுமைகளுக்கு முகங்கொடுத்து வருகிறோம்.

அழுத்கமையில் கைவைத்ததுடன், இவ்வரசாங்கத்தின் கள்ளக்குழந்தையாக செயற்பட்டுவந்த பொதுபலசேனா இயக்கம், முஸ்லிம்கள் மீது கைவைப்பதை இடைநிறுத்திக்கொண்டது.

hizbulla bazeer rishad

ஜனாதிபதித் மேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் இலங்கையில் பொதுபலசேனா என்ற அமைப்பு இருக்கிறதா என்று கேட்கவேண்டிய சந்தேகம் இப்போது இருக்கிறது. இன்று இவ்வியக்கத்தை அடக்க இயலுமானால், கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு அடக்க முடியாமல் போனது ஏன்?

இதற்குக் காரணம் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடையவே கிடையாது. மாறாக இலங்கையின் முஸ்லிம் சமூகமே.

இதன் பின்னணியில்தான் ஊவா தேர்தல் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், ஆளும் அரசாங்கத்துக்கும் மக்களின் மனங்கள் முதன்முதலாக எடுத்துக்காட்டப்பட்டது. முதன் முதலாக அரசாங்கம் மக்களை புரிந்துகொண்டனர்.
இலங்கை முஸ்லிம் மக்கள் ஆட்சிமாற்றத்தை அழுத்கமை சம்பவத்திற்குப் பின்னர் தீர்மானித்துவிட்டனர்.

muslim politicians

இதனால் இன்னும் இன்னும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தால் அது அவர்களுக்கான எதிர்கால அரசியல் இருக்கைக்கான சாவுமணியாகவே அமையும்.

அரசாங்கத்துடன் யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன இலங்கை முஸ்லிம்கள் ஆட்சிமாற்றத்தை தீர்மானித்துவிட்டனர். ஆட்சியைத் தீர்மானிப்பதும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தீர்மானிப்பதும் இன்ஷா அல்லாஹ் மக்களின் கைகளில் இருக்கிறது.

இதனால் உங்களுக்கு மீண்டும் சொல்கிறோம்

அரசியல்வாதிகள் சொல்வதை மக்கள் செய்தனர் அன்று!
மக்கள் சொல்வதை நீங்கள் செய்யவேண்டும் இன்று – இல்லையேல் கதிரை போய்விடும் நாளை!!

Published by

Leave a comment