Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களின் விபரம்

    KCDA கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டிற்கான நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினர்களின் விபரம்.

  • காத்தான்குடியில் மைத்திரி: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

    காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, இன மத பேதங்களுக்கு அப்பால் சிங்கள பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

  • ஹிந்தி நடிகர், நடிகையை களமிறக்கியுள்ள மஹிந்த

    கொழும்பு: மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரங்களை முன்னிட்டு இலங்கை வந்துள்ள  ஹிந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையில் பிறந்த ஹிந்தி நடிகை ஜக்குலின் பெர்ணாண்டிஸ் ஆகியோருடன் மஹிந்த.

  • “ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும்”: மைத்திரிபால

    மொனராகல: ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டின் பின்னர் ஜனாதிபதி ஊழல் மோசடி மிக்க ஆட்சியை முன்னெடுத்தார்.

  • கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மஹிந்த கூட்டணி!

    திருகோணமலை: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. 37 ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 14 ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களைப் பெற்றிருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து, கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைத்திருந்தது.

  • ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

    கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

  • “மு.கா. மற்றுமொரு மகா தவறை அரங்கேற்றியது”: சேகு இஸ்ஸதீன்

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கிழைத்த மற்றொரு மகா தவறு என மு.கா. முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.

  • சயீட் அஜ்மல் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளார்!

    லாஹூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) தனது பந்துவீச்சுக்கு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். பந்துவீச்சு முறையில் சந்தேகத்திற்கு உள்ளான 37 வயதான அஜ்மலுக்கு, கடந்த செப்டெம்பரில் ஐ.சி.சி. பந்துவீச தடை விதித்தது.

  • வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 3ஆம் திகதி வரை நீடிப்பு

    கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஜனவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப் பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

  • அல்-கிம்மா நிறுவனத்தினால் வெள்ள நீரினை வெளியோற்றும் பணிகள் ஆரம்பம்

    –  எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இம் மாகாண மக்களினது இயல்பு நிலை பாதிப்படைத்துள்ளதுடன் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் தொய்வு நிலையை அடைத்துள்ளது.பல்வேறு வழிகளிலும் பாதிப்படைத்துள்ள மக்களுக்கான நிவாரன பணிகளை அரச,அரசசார் பற்ற நிறுவனங்களின் அனுசரனையுடன் நிவாரணப்பணிகள் முன்னொடுக்கப்பட்டு வருகின்றன.

  • பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் இலங்கை மக்கள் அரங்கச்செயற்றிட்டம் 2014 – 2015

    – எம்.ரீ.எம். பாரிஸ் அனுராதபுரம்: இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் இலங்கை மக்கள் அரங்க செயற்றிட்டத்தின்னூடாக பன்மைத்துவம் மற்றும் பல்வகைமையை ஏற்றுக்கொள்ளுதல் பேச்சளவில் ஒருவருடன் கூடி வாழுதல் என்பதற்கு மாறாக சகோதர சமயத்தவர்களின் வித்தியாசங்களை புரிந்து கொள்ளுதல், ஏற்புடைமை வழங்குதல்,கற்றல் மற்றும் மதிப்பளித்தல் என்ற உயர் எண்னங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் இலங்கையின் பல் வேறு பகுதிகளில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

  • சம்மாந்துறையில் மைத்திரிக்கு மக்கள் அமோக வரவேற்பு!

    – எம்.ரீ.எம்.பர்ஹான் சம்மாந்துறை: பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேனவையை ஆதரித்து நேற்று 28.12.2014 சம்மாந்துறை அசரப்பா வட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. சம்மாந்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் றமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேன, முன்னால் மீன்பிடித்துறை அமைசரும் வைத்தியருமான றாஜித சேனாரத்தின, ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கமிட்டியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான கரு ஜயசூரிய,

←Previous Page
1 … 577 578 579 580 581 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar