பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் இலங்கை மக்கள் அரங்கச்செயற்றிட்டம் 2014 – 2015

sdjf– எம்.ரீ.எம். பாரிஸ்

அனுராதபுரம்: இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJF) பன்மைத்துவத்தை ஊக்குவிக்கும் இலங்கை மக்கள் அரங்க செயற்றிட்டத்தின்னூடாக பன்மைத்துவம் மற்றும் பல்வகைமையை ஏற்றுக்கொள்ளுதல் பேச்சளவில் ஒருவருடன் கூடி வாழுதல் என்பதற்கு மாறாக சகோதர சமயத்தவர்களின் வித்தியாசங்களை புரிந்து கொள்ளுதல், ஏற்புடைமை வழங்குதல்,கற்றல் மற்றும் மதிப்பளித்தல் என்ற உயர் எண்னங்களை கருத்தில் கொண்டு இத்திட்டம் இலங்கையின் பல் வேறு பகுதிகளில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக இலங்கை மக்கள் அரங்கச்செயற்றிட்டத்தின் ஆரம்பபயிற்சிகள் அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்றன. இதில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகத்தைச்சேர்ந்த கண்டி,திருகோணமலை, பொலன்னறுவை ஆகியமாவட்டங்களைச் பிரதிநிதித்துவ படுத்தும் 36 இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கானபயிற்சிகள் அனைத்தும் துறைசார் வல்லுனர்களை கொண்டு நடாத்தப்பட்டதுடன் மக்கள் அரங்கத்தின் வாயிலாக பன்முகத்தன்மையை ஊக்குவிப்பது தொடர்பாகவே அமைந்திருந்தன.

sdjf

இப் பயிற்சி முடிவில் வன்முறையை இல்லாதொழித்து உரையாடலை ஊக்குவித்தல் எனும் தொனியில் 20 அரங்கப்பிரதிகளை கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் எழுதியிருந்தனர்.

இந்த இருபது மக்கள் அரங்கப்பிரதிகளும் நாடகவடிவில் வடிவமைக்கப்பட்டு கண்டி,திருகோணமலை,பொலன்னருவை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள (30) முப்பது பாடசாலைகளில் அரங்கேற்றப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு வடமத்திய,கிழக்கு மற்றும் மத்திய மாகாண கல்வியமைச்சுடன் கல்வித்திணைக்களங்களும் பெறும் வரவேற்பைவழங்கியுள்ளதுடன் பாடசாலைகளில் அரங்கேற்ற அனுமதி வழங்கிபங்களிப்பு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

sdjf (2)

மேலும் இந்தமக்கள் அரங்கசெயற்றிட்டம் எதிர்வருகின்ற வருடம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரிமாதம் 15ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

பயிற்சிநெறியில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள் தற்கால சமூகத்தில் வன்முறை எவ்வாறு எழுகின்றன,அவை எவ்வாறு பெரும் வழக்காகின்றன என்பதையும் வன்முறை தொடர்பான சமூகப்பிரச்சனைகளையும் தீர்வுகளையும் எவ்வாறுமக்கள் மயப்படுத்;தலாம் எனவும் கலநடதுரையாடினர்.

இச்சயெற்றிட்டத்தின் முதல் பாகம் கடந்த 2013ஆம் ஆண்டு கிழக்குமாகாணத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment