லாஹூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் (ஐ.சி.சி.) தனது பந்துவீச்சுக்கு இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். பந்துவீச்சு முறையில் சந்தேகத்திற்கு உள்ளான 37 வயதான அஜ்மலுக்கு, கடந்த செப்டெம்பரில் ஐ.சி.சி. பந்துவீச தடை விதித்தது.
அஜ்மல் கடந்த மூன்று ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராவார். மறுபுறம் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருக்கும் பாக். அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், ஐ.சி.சி யினால் உத்தியோகபூர்வமாக தனது பந்துவீச்சை மீண்டும் ஒருமுறை சோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் பந்துவீச்சு முறை குறித்து சோதனை செய்து வருகிறார்.
உலகக் கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் இறுதி அணி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. அஜ்மல் 30 பேர் கொண்ட பாகிஸ்தான் உத்தேச அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது பந்துவீச்சை திருத்திக் கொள்ளும் பயிற்சிகள் மற்றும் முதல் தர போட்டிகளில் விளையாடவேண்டி உள்ளார்.
அஜ் மல் தானாகவே விலகிக் கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ‘ஹர்யார் கான் குறிப்பிட்டுள் ளார். “உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக அஜ் மல் மீண்டும் ஒருமுறை ஐ.சி.சியிடம் தனது பந்துவீச்சு முறையை சோதனைக்கு உட்படுத்துவது குறித்த நாம் அவதானமாகவே இருக்கிறோம். ஏனென்றால் இந்த சோத னையில் அவர் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்தால் அவரால் ஓரிரு ஆண்டுகளுக்கு விளையாட பந்துவீச தடை ஏற்படும். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பருவத்தில் இங்கிலாந்து கழக அணியான வெர்சஸ்டர்யர் அணிக்காக விளையாடிய அஜ்மல் அதிகபட்ச மாக 63 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் முன்னேற்றத்திற்கு பங்காற்றி இருந்தார். சயீத் அஜ்மலின் பந்து வீச்சில் முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 பாகையை விட 40 பாகைக்கு மேல் வளைவதாக ஐ.சி.சி. குறிப்பிட்டிருந்தது.
Published by


Leave a comment