வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் 3ஆம் திகதி வரை நீடிப்பு

voters-list[1]கொழும்பு: ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஜனவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப் பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையுமே நடை பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவிவரும் மோசமானீ காலநிலை காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 3ஆம் திகதி கண்டியில் தேர்தல்கள் ஆணையாளர் தலைமையில் அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

Published by

Leave a comment