ஓட்டமாவடி: கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இம் மாகாண மக்களினது இயல்பு நிலை பாதிப்படைத்துள்ளதுடன் தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் தொய்வு நிலையை அடைத்துள்ளது.பல்வேறு வழிகளிலும் பாதிப்படைத்துள்ள மக்களுக்கான நிவாரன பணிகளை அரச,அரசசார் பற்ற நிறுவனங்களின் அனுசரனையுடன் நிவாரணப்பணிகள் முன்னொடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த அணர்த்த காலங்களின் போது நிவாரண பணிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு அல்-கிம்மா நிறுவனம் இம்முறையும் தமது பணிகளை ஆரம்பித்துள்ளது.
நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாரூன்(ஸஹ்வி) பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர் உள்ளிட்ட குழுவினர் வெளிநாட்டு பயனம் மேற்கொண்ட நிலையில் பணிப்பாளரின் ஆலோசணைக்கமைவாக துரிதமாக நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் நீர் இறைக்கும் இயந்திரங்களைப்பயன்படுத்தி வீடுகளுக்குள் தேங்கி கிடக்கும் வெள்ள நீரினை வெளியோற்றும் பணிகளும் சுகாதார சீர்கேடுகளில் இருத்து மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகளும் கல்குடா பிரதேசத்தில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment