Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் கீழ்கானும் விடயங்களுக்கு விடையளிப்பாரா?”

    காத்தான்குடி: “முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் கீழ்கானும் விடயங்களுக்கு விடையளிப்பாரா?” என ஐக்கிய தேசியக் கட்சி காத்தான்குடி பிரதேச முகாமையாளர் VTM முபாறக் வினா எழுப்பியுள்ளார். தாங்கள் கடந்த 14ம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போது, தான் எவ்வித அதிகார துஸ்பிரயோகத்தினையும் செய்யவில்லை எனவும், முடிந்தால் எனது ஊழல் மோசடிகளை நிரூபித்துக் காட்டுமாறும் பகிரங்கமாக சவால் விடுத்து இருந்தார்.

  • வடக்கு பகுதிக்கு செல்வதில் வெளிநாட்டவர்களுக்கு தடையேதும் இல்லை

    கொழும்பு: இலங்கையின் முன்னாள் யுத்த பிரதேசமான வடக்கு பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் செல்ல முடியாது என்று விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

  • பசில், கோத்தாபாயவுக்கு எதிராக மேர்வின் முறைப்பாடு

    கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக  முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

  • அஸாபீருல் ஜன்னாஹ் அல்குர்ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் 3வது சான்றிதழ் வழங்கும் விழாவும் புதிய மாணவர்களை வரவேற்றலும்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: அஸாபீருல் ஜன்னாஹ் அல்குர்ஆன் முன்மாதிரிப் பாடசாலையின் 3வது சான்றிதழ் வழங்கும் விழாவும் புதிய மாணவர்களை வரவேற்றலும்     17-01-2015 இன்று சனிக்கிழமை புதிய காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர்  ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து ஜனாதிபதி ஒருவரை வெற்றிக் கொள்ள பணியாற்ற கிடைத்தமை குறித்து பெரிதும் மகிழ்ச்சி: அன்புராஜ்

    மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா நானாட்டான்: வடக்கில் முதன் முதலாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுடன் இணைந்து இந்த தேர்தலில் ஒரே நோக்கத்திற்கான ஜனாதிபதி ஒருவரை வெற்றிக் கொள்ள பணியாற்ற கிடைத்தமை குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் இந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக போட்டியிட்ட போதும் அந்த உணர்வுகளை கடந்து எமது சகோதரர் ஓருவர் களமிறங்கிய உணர்வே மேலீட்டுக்காணப்பட்டதாகவும் கூறினார்.

  • ஏப்ரல் 24ல் பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

  • அரசியல் களநிலை யதாரத்தங்களை முஸ்லிம் அரசியல் குழுக்கள் உள்வாங்கி ஒன்றுபடல் வேண்டும்

    – அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஏப்ரல் மாதம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட உத்தேசிக்கப்படுவதாக அறிய முடிகிறது, மைத்ரி அரசு தனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி தொகுதிவாரி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறை கலந்த ஒரு தேர்தல் முறையில் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

  • மன்னார் விவசாயிகளின் பரிதாப நிலை!

    மன்னார்: மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய முசலிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சக்கட்டி, பாலக்குளி, கரடிக்குளி, முள்ளிக்குளம் கிராம விவசாயிகள் தமது விவசாயத்தினை முழுமையாக இழந்து பரிதாபகரமான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

  • வரலாறு படைக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டி

    அடிலைட்: உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா-பாகிஸ்தான் மோத உள்ள போட்டியை உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் கண்டுகளிக்க ஆர்வமுடன் உள்ள நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கிரிக்கெட் போட்டியை அதிகம் ரசிகர்கள் பார்த்த சாதனையை அப்போட்டி நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

  • ‘உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்’ யூனிஸ்கான்

    லாஹூர்: 1975-ம் ஆண்டு உலகக்க்கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமான நாளிலிருந்து உலகக்கிண்ணப் போட்டியில் இதுவரை ஒரு முறை கூட பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதாக வரலாறு கிடையாது. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் உட்பட 12 அமைச்சர்கள் நேற்று பதவியேற்பு

    கொழும்பு: பிரதமர் உட்பட 12 அமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களும், 4 பிரதியமைச்சர்களும் நேற்று தமது பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவிகளைப் பெறுப்பேற்றுக்கொண்டார்.

  • “கொழும்பில் இரண்டு கட்டங்களாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் மஹிந்த”

    கொழும்பு: “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த தேர்தலுக்கு அடுத்த நாள் கொழும்பில் சுமார் 2000 படையினரை தயார்நிலைப்படுத்தினார்” என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். இராணுவப்புரட்சிக்காகவே இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

←Previous Page
1 … 553 554 555 556 557 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar