அல் மனார்: ஷரீஆ பிரிவிற்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் கோரல்

almanar– அல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தொடராக விடுத்து வந்த வேண்டுகோளுக்கமைவாக எமது அல் மனார் நிறுவனம் ஷரீஆ பிரிவிற்கு இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை கோரியுள்ளதாக பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

பாடசாலைக்கல்வியில் இவ்வருடம் தரம் 9ல் கற்றுக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் இக்கற்கை நெறிக்காக விண்ணப்பிக்க முடியும். தெரிவு செய்யப்படும் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரப்பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கேற்றவாறு பாடவிதானங்கள் இடம்பெறுவதுடன் ‘சிட்டி கெம்பஸ்’ ஊடாக தகவல் தொழில் நுட்ப அறிவும் வழங்கப்படவுள்ளது.

க.பொ.த உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் மற்றும் மௌலவி பட்டத்தினை மையப்படுத்தி மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி ஊடாக தொழில் நுட்ப பாடநெறிகளில் டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்ளும் முகமாக பாடவிதானங்கள் வடிவiமைக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் கூறினார்.

விண்ணப்ப படிவங்களை எமது அல் மனார் நிறுவன வரவேற்பு பீடத்தில் பெற்று எதிர்வரும் 31.01.2015 ஆம் திகதிக்கிடையில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்குமாறும் கோரப்படுகின்றது.

இவ்வாண்டுக்கான முதல் கட்ட மாணவர்கள் உள்வாங்கப்பட்டு ஷரீஆ பாடநெறிகள் இயங்கி வருகின்ற போதிலும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான ஷரீஆ வகுப்புக்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment