கொழும்பு: ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் புதல்வர் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தினத்தின் போது பொது வேட்பாளரின் காரியாலயம் ஒன்றைத் தாக்கியது, அனுமதியின்றி உட்பிரவேசித்தமை, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை என்பவை தொடர்பாக
முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் புதல்வரும் மத்திய மாகாண சபை அங்கத்தவருமான அனுராதா ஜயரத்ன மற்றும் கம்பளை நகர சபை அங்கத்தவர்கள் இருவர், உடபலாத்த பிரதேச சபை அங்கத்தவர் ஒருவர், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவர் மீது சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கம்பளை நீதவான் உபுல் ராஜகருணா மேற்படி சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் உள்ளூராட்சி சபை அங்கத்தவர் ஒருவரான தர்சன நயன தரங்க என்பவர் மட்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களையும் தொடர்புடைய வாகனங்களையும் பொலிஸார் தேடிவருகின்றனர்.
Published by
![BANNED-logo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/banned-logo1.png?w=150&h=121)
Leave a comment