சாய்ந்தமருதில் ‘கல்விக்கு உரமிடுவோம்’ வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

sainthamaruthu– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது 15ம் பிரிவு கல்வி அபிவிருத்தி மையம் மற்றும் மாற்றத்திற்கான பங்காளி ஆகிய அமைப்புக்கள் இணைந்து ‘கல்விக்கு உரமிடுவோம்’ திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 15ம் கிராம சேவக பிரிவிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது 15ம் பிரிவு கிராம சேவக உத்தியோகத்தர் எல்.நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.அமீர் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹீம், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.றமீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, மாற்றத்திற்கான பங்காளி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.ஏ.சனூன், சாய்ந்தமருது யூத் ‘லங்கா நிறுவன பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

sainthamaruthu

இதன்போது அதிதிகளினால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

sainthamaruthu (2)

சாய்ந்தமருது 15ம் பிரிவு கிராம சேவக உத்தியோகத்தர் எல்.நாஸர் தனது கடமையை இக்கிராம சேவக பிரிவு மக்களுக்கு திறன்பட செய்து வருவதுடன் அதற்கு மேலாக இப்பிரிவிலுள்ள வறிய குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு உயிரூட்டும் இச்சேவையினை பலரும் பாராட்டியதுடன் இவர் சாய்ந்தமருதில் ஒரு முன்மாதிரியான கிராம சேவக உத்தியோகத்தர் எனவும் இந்நிகழ்வின் போது பலரும் பாராட்டினர்.

Published by

Leave a comment