-
திஸ்ஸ அத்தநாயக்க கைது
கொழும்பு: முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
ஸனாஇய்யாவில் வாராந்த இஸ்லாமிய வகுப்புக்கள்
கட்டாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) ஸனாஇய்யா: அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
அநியாய ஆட்சி அட்டூழியம் முடிவுக்கு கொண்டுவர புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது: காத்தான்குடியில் அமைச்சர் றவூப் ஹக்கீம் உரை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த அரசின் காலத்தில் ஏற்பட்ட அநியாய ஆட்சியின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவர புதிய சட்ட திருத்தங்களை அமுல்படுத்த புதிய அரசாங்கம் தயாரகி வருகின்றது. இதன் மூலம் பெண்களுக்கான வன்முறைகள், சிறுவர்களுக்கான துஷ்பிரயோகம் போன்றவைகளை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
முஸ்லிம் மீடியா போரம் ஊடக செயலமர்வுக்கு விண்ணப்பம் கோரல்
SLMMF கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் ஊடக செயலமர்வு ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இச்செயலமர்வில் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆர்வமுள்ளவர்கள் பங்குபற்ற முடியும்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்: 20ஆவது ஆண்டு இலச்சினை அறிமுகம்
SLMMF கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 20ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது.
-
அதிகார துஷ்பிரயோகம் செய்யும் கிராம சேவகரை இட மாற்றம் செய்யுங்கள்: மாஞ்சோலை கிராம மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பரிவிலுள்ள 207 ஏ கிராம சேவகர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் அவரை இட மாற்றம் செய்யுமாறும் கோரி 02-02-2015 இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிற்றிமுனை மக்கள் பெரும் வரவேற்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா கல்முனை: கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிக மற்றும் வாணிப துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிற்றிமுனை மக்கள் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று நடத்தினர்.
-
உலகக் கிண்ண கிரிக்கெட்: ஒரே நேரத்தில் இரு ஆரம்ப விழாக்கள்!
மெல்போன்: உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், நியுசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் என, இரு இடங்களில் ஒரே நேரத்தில் ஆரம்ப விழா நடக்கவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் 11ஆவது உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலாந்தில் வரும்பெப் ரவரி 14இல் ஆரம்பமாகிறது.
-
வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்: மன்னிப்போம் ஆனால் மறக்கமாட்டோம்
முஹம்மட் ஜாமில் காத்தான்குடி: இந்த கட்டுரை மூலமாக நான் பிரதேசவாதமோ அல்லது இன வாதமோ பேசவில்லை. வரலாற்று பாடங்களை படிப்பினையாக கொண்டு காத்த நகர் மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
-
சுதந்திரதின வைபவ ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி
கொழும்பு: 67வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 08 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர, பாராளுமன்ற மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும். “செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்” என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும். சுதந்திர தின வைபவ ஆரம்பத்துக்கு முன்னர் முதலாவது பிரதமர்
-
மிதக்கும் ஆயுதக் களஞ்சிய நிறுவனத்திடம் விசாரணை
கொழும்பு: இலங்கையில் தெற்கு கடலில் பெருந்தொகை ஆயுதங்களுடன் தடுத்துவைக்கப்பட்ட கப்பலை நிர்வகித்துவந்த கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்திடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 10 நாட்களில் தெற்கே, காலி துறைமுகத்தில் பெருந்தொகை ஆயுதங்களுடன் கப்பலொன்று தடுத்துவைக்கப்பட்டிருந்தது.
-
பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இன்று அதிகரிப்பு
அப்துல் அஸீஸ் மட்டக்களப்பு: இலங்கையில் நீண்ட காலமாக ஆணாதிக்க தன்மை கொண்ட சமுகமே காணப்படுகிறது. பால்நிலை மற்றும் பால் குறித்த எண்ணக்கரு அந்நியமானதாகவும், மேற்கத்திய தன்மையானதாகவும் உள்ளது என மக்கள் மத்தியில் தோன்றியுள்ள எண்ணக்கருவே பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் இன்று அதிகரித்துக் காணப்படக் காரணம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.