கொழும்பு: முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
போலி ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, இன்று முற்பகல் 11.30 மணியளவில் பௌத்தாலோக மாவத்தை பகுதியில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment