கொழும்பு: 67வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி காலை 08 மணிக்கு கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர, பாராளுமன்ற மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும். “செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்” என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும். சுதந்திர தின வைபவ ஆரம்பத்துக்கு முன்னர் முதலாவது பிரதமர்
அமரர் தேசபிதா டி.எஸ். சேனநாயக்காவின் உருவச்சிலைக்கு காலை 7.30 மணிக்கு மலர் வழிபாடு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து சுதந்திர தின அணிவகுப்பு நடை பெறும்.
முப்படை, பொலிஸ், பாதுகாப்பு அணி, இளைஞர் படையணிகளைச் சேர்ந்த 5922 வீரர்கள் அணிவகுப்பில் பங்கு கொள்வர்.
600 கலைஞர்களின் பங்குபற்று தலுடன் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறும். திங்களன்று முழு இரவு பிரித் பாராயணம் நடைபெற்று மறுநாள் தானம் வழங்கப்படும். பாடசாலை மட்டத்திலும் சுதந்திர தின விழாக்கள் ஏற்பாடாகியுள்ளன.
Published by

Leave a comment