வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்: மன்னிப்போம் ஆனால் மறக்கமாட்டோம்
முஹம்மட் ஜாமில்
காத்தான்குடி: இந்த கட்டுரை மூலமாக நான் பிரதேசவாதமோ அல்லது இன வாதமோ பேசவில்லை. வரலாற்று பாடங்களை படிப்பினையாக கொண்டு காத்த நகர் மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன்.
பொறியியலாரும் சகோ ஹிஸ்புழ்ழாவால் அரசியலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டவருமான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோ சிப்லி பாறூக்கின் கடந்த சில தின நிகழ்வுகள் சுய நலத்துக்கு அப்பால் எமதூரை பற்றி சிந்திக்கின்ற அதிக சகோதரர்களின் உள்ளத்தில் பல தாக்கங்களையும், கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய செயற்பாட்டின் காரணமாக எமதுூரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சகோ ஹிஸ்புழ்ழாஹ்வின் முடிவில் நான் உற்பட ஊரின் அதிக சகோதரர்கள் அதிருப்பித்தியடைந்து ஜனாதிபதி மைதிரிபால சிறி சேனவுக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தாரர்கள். ஆனால் சில வேளை அழ்ழாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக இருந்து முன்னால் ஜனாதிபதி மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாகியிருந்தால் முஸ்லிம் சமூகத்தை பற்றி பேசுவதற்கு ஒரு சில முஸ்லிம் தலைவர்களாவது முன்னால் ஜனாதிபதியுடன் இருந்தமையின் அவசியம் அரசியலில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு நன்றாக புரியும்.
முஸ்லிம்கள் பொது பல சேனாவினால் பெரும் நெறுக்கடிகளுக்கு முகம் கொடுத்த சந்தர்ப்பத்தில் பல நெருக்கடியான சூழலினால் சகோ ஹிஸ்புழ்ழாஹ் உற்பட முஸ்லிம் காங்ரசோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்ரசோ அல்லது PMGG/NFGG யோ தகுந்த நேரத்தில் எந்த வித நடவடிக்கைகளையோ அல்லது ஆரோக்கியமாண எந்த ஜனனாயக போராட்டத்தையோ செய்யவில்லை. பொது பல சேனாவினாலும் முன்னால் ஜனாதிபதி மஹிந்தவினாலும் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதன் பின்னரே கடந்த மாகாண சபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முஸ்லிம் காங்ரசோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்ரசோ முன்னால் ஜனாதபதி மஹிந்தவின் அரசுக்கு எதிராக செயற்பட்டு தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்தால் தமிழ் கூட்டமைப்பு ஆட்சியமைத்து முஸ்லிம் காங்ரசுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தருவதாக இரா. சம்பந்தன் ஐயா கூறியும் கூட முன்னால் ஜனாதபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கும் போது இல்லாத சமூக அக்கரை ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரத்தில் மட்டும் எங்கிருந்து வந்தது.
தகுந்த நேரத்தில் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அரசுடன் ஒட்டிக்கொண்டு சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு தற்போது காலம் தங்களுக்கு சாதகமானதை பயன்படுத்தி சமூக சிந்தனை பற்றி பேசுவது நியாயமாகுமா? முன்னால் ஜனாதிபதி மஹிந்தவின் அரசு முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கிறது என்று நீங்கள் நினைத்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் அறிவித்தவுடனேயே அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் இனணந்திருந்தால் உங்களை தியாகிகள் என்று சொல்லலாம்.
ஆனால் அரச சுகபோகங்களை விட்டு வெளியேற மனம் இல்லாமல் கடைசி நேரம் வரை இருந்து விட்டு மக்கள் மாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எதிரணியில் சேர்ந்தவர்கள்தான் அமைச்சர் றிஸாட் உற்பட அனைத்து அகில இலங்கை மக்கள் காங்ரஸ் உறுப்பினர்களும். ஏன் அமைச்சர் றிஸாட் அவர்களின் அமைச்சுக்குள் புகுந்து பொது பல சேனா குழப்பம் ஏற்படுத்தியும் அவர்களை அரசு கைது செய்யாமல் விட்டும் கூட அகில இலங்கை மக்கள் காங்ரஸ் அரசில் இருந்து வெளியேறவில்லை என்பதும் இவ்விடத்தில் ஞாபகமூட்ட வேண்டிய விடயம்.
முஸ்லிம் காங்ரசை எடுத்துக்கொண்டால் ஜனாதிபதிதேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னரே அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் இணைந்தார்கள். இதற்கு எந்த சமூக காரணும் இல்லை. அமைச்சர் றிஸாட்டின் முடிவை பார்த்து அதிர்ந்த முஸ்லிம் காங்ரஸ் தலைமை மக்கள் எதிரணிக்கு மாறியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாம் எதிரணிக்கு செல்லாவிட்டால் தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு அடுத்ததாக தேசிய தலைவராக மக்கள் அமைச்சர் றிஸாடை ஆக்கிவிடுவார்கள் என்ற ஓரே பயத்தினாலேயே அமைச்சர் றஊப் ஹகிம் எதிரணிக்கு மாறினார். எதிரணிக்கு மாறுவதற்கு கடைசி தினம் வரை முன்னால் ஜனாதபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தில் முஸ்லிம் காங்ரஸ் இருந்தது இவ்விடத்தில் ஞாபகமூட்ட வேண்டிய விடயம்.
அழ்ழாஹ்வின் நாட்டத்தாலும் மக்களின் மாற்றத்தாலும் காலத்தின் சாதகத்தாலும் அமைச்சர் றஊப் ஹகிமும் அமைச்சர் றிஸாடும் தியாகிகளாக மாறினார்களே தவிர இவர்கள் அணு அளவும் தியாகம் செய்யவில்லை. இவர்களுக்கும் சகோ. ஹிஸ்புழ்ழாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இவர்களை விட ஒரு வாரம் கூடுதலாக முன்னால் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சகோ. ஹிஸ்புழ்ழாஹ் ஆதரவு வழங்கியதாகும். இதனால் மாத்திரம் இவரை தியாகிகளின் பட்டியலில் இருந்து நீக்கி துரோஹிகளின் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். சகோ சிப்லி பாறூக் அவர்களே மற்றும் காத்தான்குடி வாக்காளர்களே இது எந்த வகையில் நியாயம்???
இன்று சகோ சிப்லி பாறூக், ஹிஸ்புழ்ழாவை புறம் தள்ளிவிட்டு அமைச்சர் றிஸாடுடனும் பிரதியமைச்சர் அமீர் அலியுடனும் சேர்ந்து கொண்டு ஹிஸ்புழ்ழாவை துரோஹி போல் சித்தரிப்பது நன்றியுள்ள காத்தான்குடி மக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சகோ சிப்லி பாறூக் அவர்களே!
நீங்கள் அரசியலில் கத்துக்குட்டி. மூன்று வருடங்களுக்கு முன் உங்களுடைய அரசியல் அறிவும் செயற்பாடும் பூச்சியமாகவே இருந்தது. இரண்டு முறை நாம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்ததை இழந்து அடைந்த வடுக்கல் இன்னும் போகவில்லை. அந்த வடுக்கள் பற்றியாவது உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அதனால் சில உதாரணங்களை தொட்டுச்செல்கின்றேன். எமது காத்த மண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து அரசியல் அனாதையாக இருந்த போது பொது பலசேனா கூட செய்யாத ஒரு பாரிய துரோகத்ததை ஓட்டமாவடி சமூகம் காத்தான்குடி வர்த்தகர்களுக்கு செய்தது. அதுதான் 50 மேற்பட்ட காத்தான்குடி வர்த்தகர்களுக்கு சொந்தமான ஓட்டமாவடிக்கடைகள் தீக்கிரையாக்கப்பட்டும் துரத்தியடிக்கப்பட்டவையும் உங்களுக்கு தெரியுமா? அமீர் அலி அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது எமதூரில் நாட்டிய அடிக்கல்கள் மாத்திரம் இன்னும் எஞ்சி இருப்பது உங்களுக்கு தெரியுமா??
சகோ சிப்லி பாறூக் அவர்களே! சகோ ஹிஸ்புழ்ழாஹ் எமது ஊருக்கு பல சேவைகளையும் பல தியாகங்களையும் செய்த ஒருவர். உங்களுடைய கைகள் கறை படியாதவை. ஆனால், நீங்கள் இப்போது சேர்ந்திருக்கும் அமைச்சர் றிஷாட், அமீர் அலி எந்த ஊழலும் செய்யாத உங்களை போன்ற ஒரு உத்தமர் என்று சொல்கின்றீர்களா? நூறு வீதம் ஊழல் அற்ற அரசியல் செய்வதன்றால் நீங்கள் அரசியலில் தனித்து நில்லுங்கள். நாங்கள் எங்களுடைய உயிரை தந்தாவது உங்களை ஆதரிக்கின்றோம். நீங்கள் தற்போது சேர்ந்திருக்கும் இந்த அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்தி காத்தான்குடி வாக்குகளை சிதறடிக்க செய்து எமது மண்ணின் பிரதிநிதுத்துவத்தை இல்லாமல் செய்ய சதிதிட்டம் தீட்டுகின்றார்கள். உங்களை பயன்படுத்தி மீண்டும் அமீர் அலி பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றார். எப்படியும் நீங்கள் அமீர் அலியை விட கூடுதல் விருப்பு வாக்குகளை பெற மாட்டீர்கள் என்பது அமீர் அலிக்கு நன்றாக தெரியும். நூறு சதவீதம் தூய அரசியல் செய்ய நீங்கள் விரும்பி அதை உங்களால் செய்ய முடியா விட்டால் தயவு செய்து அரசியலில் இருந்து ஒதுங்கி விடுங்கள். உங்கள் தூய எண்ணத்துக்கு அழ்ழாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்ல கூலியை வழங்குவான்.
சகோ சிப்லி பாறூக் அவர்களே! தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் பிரதித் தலைவர் என்பது உங்களை வாழை மரத்தில் ஏற்றிவிட்டதைபோல் இருக்கின்றது. இது அமைச்சர் றிஷாட், அமீர் அலியின் கபட காய் நகர்த்தல் என்பதை மறந்துவிடாதீர்கள். எந்த வகையில் அமைச்சர் றிஷாட் மற்றும் அமீர் அலி சகோ ஹிஸ்புழ்ழாவை விட சிறந்தவரானார்கள் என்பதை தயவு செய்து கூறுங்கள்.
எனவே காத்தான்குடி வாக்காளர்களே!
மீண்டும் நாம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து பல வடுக்களை சுமப்பதற்கு முதல், வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம். சேவையின் திலகம் உண்மையான எமதூரின் தியாகியின் கைகளை பலப்படுத்தி எமதூரின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்கு அழ்ழாஹ் எம்மனைவருக்கும் நல்ல சமூக சிந்தனைகளை தந்து தமது சுயநலங்களை மறக்கடிக்க வேண்டும் என்று பிரார்தித்து விடை பெறுகின்றேன்.
4 responses to “வெள்ளம் வருமுன் அணை கட்டுவோம்: மன்னிப்போம் ஆனால் மறக்கமாட்டோம்”
alif
மதுபாணம் விற்றாவது பணம் சம்பாதிக்க வேண்டும்.ஹலால்,ஹறாம் தேவையில்லை இதுதான் உங்கள் கருத்து. நல்லவர்களுக்கு காத்தான்குடி மக்கள் வாக்கழிக்க மாட்டார்களா?ஊரில் ஒரு புதிய மறுமளச்சி தேவையில்லையா?.பழய நஜீஸுடந்தான் இருக்கப் போகிறோமா? இந்த எண்ணம் உள்ளவரை 1000 சிப்லி வந்தாலும் ஹ்ஹ்ஹ்ஹ் 0 தான்?
ஹிஸ்புழ்ழாஹ் செய்வதையெல்லாம் நான் நியாயப்படுத்த வரவில்லை. மனிதன் என்ற வகையில் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள். ஜனாதிபதி தேர்தலின் போது நானும் ஹிஸ்புழ்ழாஹ்வுடைய முடிவுக்கு உடன்படவில்லை. நான் நாட்டில் இல்லாத படியால் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடாவிட்டாலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மைதிருக்கே வாக்களித்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் ஒன்று சேர்ந்த எமது ஊர்மக்கள் வெற்றியை கொண்டாடும் போது கூட ஒன்றாக இல்லை என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஒன்று சேர்ந்தவர்களின் சுய றுூபங்களும் நோக்கங்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எமதுூரின் வாக்குகள் நான்கு பக்கமாக சிதறியடிக்கப்பட்டுள்ளது.ஹிஸ்புழ்ழாஹ்வுக்கு கொஞ்சப்பேர், முஸ்லிம் காங்ரசுக்கு கொஞ்சப்பேர், அகில இலங்கை மக்கள் காங்ரசுக்கு கொஞ்சப்பேர்,NFGG கொஞ்சப்பேர். இது எமதுூறுக்கு ஆரோக்கியமான விடயமா???
ஹிஸ்புழ்ழாஹ்வை குறை கூறுபவர்களின் நோக்கம் ஹிஸ்புழ்ழாஹ் தவறு செய்திருந்தால் அவரை சட்டத்துக்கு முன்னிறுத்தி சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதல்ல. மாறாக ஹிஸ்புழ்ழாஹ்வின் இடத்துக்கு தாங்கள் வரவேண்டும் என்று நினைத்து செயற்படுவதையே நாங்கள் எதிர்க்கின்றோம். நல்லவை செய்யும் பேது பாராட்டுக்களையும் ஊக்குவிப்புக்களையும் வழங்குபவர்கள் மாத்திரமே தவறு செய்யும் போது விமர்சிக்கவும் தட்டிக்கேக்கவும் தகுதியானவர்கள் என்பது எனது வாதம். NFGG காரர்களின் விமர்சனத்தைபார்க்கும் போது ஹிஸ்புழ்ழாஹ் காத்தான்குடி மண்ணுக்கு இதுவரை எந்த ஒரு நல்லவிடயமும் செய்யவில்லை போல் இருக்கின்றது.
இன்று எமதுூரில் தியாகியாக மாறியிறுக்கும் அனைவரின் வண்டவாளங்களும் ஆதாரபூர்வமாக என்னிடம் இருக்கின்றன. மாற்றுமத கலாச்சாரம் யூதக் கலாச்சாரம் அனைத்தையும் அரங்கேற்றியவர்களின் வீடியோ
புகைப்பட ஆவணங்கள் என்னிடமுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கை ஒரு முஸ்லிமுடைய மானம் என்பற்றை கருத்திற்கொண்டுதான் அது சம்பந்தபான விடயங்களை பற்றி நான் பேசுவதில்லை.
மது மாதுக்கு அடிமையில்லாத ஒரு தலைவனை நாங்கள் விரும்புகின்றோம். சகோதரரே அரசியலை வெளியில் இருந்து பார்த்தால் அதன் கடினத்தனம் விளங்காது. அதனுல் புகுந்தால் பல தர்மசங்கடமான சூழலும், பல விடயங்களை வெளியில் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல், சிலர் என்னதான் தவரு செய்தாலும் எதிர்க்கவும் முடியாமல், சிலைக்கு மாலை போடுவது,குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற இக்கட்டான சூழல்கள் உறுவாகும். ஆனால் உள்நோக்கங்களை நன்கு அறிந்தவன் அழ்ழாஹ். 25 வருடமாக அழ்ழாஹ்வின் உதவியுடன் உயர்ந்து கொண்டு செல்லும் ஹிஸ்புழ்ழாஹ்வின் உள்நோக்கம் நல்லதாக இருப்பதனாலேயே அவரை
யாறாலும் வீழ்த்தமுடியாமல் இருக்கின்றது. சகோதரரே உங்களையும் அன்புக்கரம் கொண்டு அழைக்கின்றேன்.
நீங்கள் சொல்வதில் நியாயம் இல்லாமலில்லை ஒரு தலைமைத்துவத்திற்கு பல வழி்களிளும் எதிப்புகள் அதிகத்தால் நமது பிரதிநிதித்துவம் ? ஆகிவிடும். ஆகவே அவர் ஒரேயோரு முறை ஒதுங்கி பின்னிருப்பவருக்கு வழி விட்டாலென்ன? அவர் எமதூருக்கு செய்த சேவை அளப்பெரியது இதில் எந்த மாற்றமுமில்லை.அத்தோடு வ்ழியும் விட்டால் மக்கள் மணதில் நீங்கா இடம் பெறுவார்.ஊர்கூடி ஒருவரை நிறுத்தி வெற்றி பெறுவோம்.அவரது செயல்பாடு நலமாக அமையாவிட்டால் இவரை மறுபடி நிறுத்தினால் வாக்குக்குக் குவியும்.`இதுதான் என் பணிவான கருத்து
ஜனாதிபதி தேர்தலில் ஒரே மேடை போட்ட முஸ்லிம் காங்ரஸ், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் nfggஒன்றாக இணைத்து பாராளுமன்ற தேர்தலில் ேபேோட்டியிட முடியுமானால் நானும் ஆதாரவளிக்கின்றேன். இது என்னுடைய சவால் அவர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள், பொறாமை இல்லாதவர்களாக இருந்தால் புதிதாக ஒருவரை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுைடைய ஆதாரவை அவருக்கு வழங்க முன்வருவார்களா
Leave a comment