-
‘நல்லாட்சியை நோக்கிய புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் NFGGயின் 67வது தேசிய சுதந்தர தினம்
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) என்பன இணைந்து நடாத்திய 67வது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள அவ்வமைப்புக்களின் தலைமையகத்தில் நடைபெற்றன.
-
ஹிழுரிய்யா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றிய 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்
– பசீர் அகமட் காத்தான்குடி: காத்தான்குடி ஹிழுரிய்யா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றிய 2015 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 06.02.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பாடசாலை அதிபர் M.S.S.அஹமட் அறிவித்துள்ளார்.
-
அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்தில் காலடிவைக்கிறது ‘YOURKATTANKUDY’
بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அன்பான வாசகர் இதயங்களே, 04-02-2012- இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன்னர், இதே போன்றதொரு இலங்கையின் சுதந்திர தினமான இதே தினத்தில் காத்தான்குடியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது இணையத்தளமான http://www.yourkattankudy.com உலகை முதன்முதலாக வலம் வந்தது.
-
நாகரிகமான அரசியல் கலாசாரத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர்
கொழும்பு: “நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உண்மையான அர்த்தம் பொருந்தியதாக ஆக்குவதன் மூலம் அந்த உன்னத நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட இன்றைய தினத்தில் உறுதி பூணுவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத் துள்ள சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
நல்லாட்சியின் ஒளியில் சுபிட்சத்துக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்: ஜனாதிபதி
கொழும்பு: “நாம் சுதந்திரமாக முன்னோக்கிப் பயணிக்கின் றோம் என்ற வகையில், இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளை கொண்டுவரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம்.
-
அறுபத்தேழில் ஆனந்த சுதந்திரம்
– அப்துல் அஸீஸ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காத்தான்குடி: இலங்கை 67வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. ‘செழிப்புமிக்க தாய்நாடு அபிமானமிக்க நாளைய தினம்’ என்பதே இவ்வருட சுதந்திர தின தொனிப்பொருளாகும். உலக வரலாற்றினை எடுத்துக் கொண்டால், சகல பிரச்சினைகளுக்கும் மையமாகக் கொண்டிருப்பது அதிகாரமும், ஆட்சியும்தான். இலங்கை பிரித்தானிய பேரரசிற்குக் கீழ்ப்பட்ட குடியேற்றம் ஒன்றாகவிருந்தது.
-
தேசிய ஷூரா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி
கொழும்பு: இலங்கை ஒரு சுதந்திர தேசமாக இன்று ஒரு புது அனுபவத்தின் நுழைவாயிலில் உள்ளது. சுதந்திரம், விடுதலை என்பன வெவ்வேறு வடிவங்களில் எம் நாட்டை வந்தடைந்துள்ளன. இத்தகைய பல்வேறு வடிவங்களிலும் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கியர் எனும் நம் நாட்டின் பல்வேறு இன மக்களும் முக்கிய பாத்திரங்களை வகித்துள்ளனர்.
-
காத்தான்குடி பல்வேறு வீதி அபிவிருத்தி தொடர்பில் அரசியல் தலையீடு இருக்கின்றது என கொந்தராத்துக்காரர் தன்னிடம் தெரிவித்துள்ளார்: தவிசாளர் அஸ்பர்: தொலைபேசி உரையாடல் – ஓடியோ இணைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பாம் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதியின் அபிவிருத்தி தொடர்பில் அரசியல் தலையீடு இருக்கின்றது என அவ் வீதியை ஒப்பந்தம் செய்த கொந்தராத்துக்காரர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் தெரிவித்தார்.
-
காத்தான்குடி பாம் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதியின் அபிவிருத்தி தொடர்பில் இருக்கின்ற பிரச்சினை தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்: ஓடியோ இணைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பாம் வீதி உள்ளிட்ட பல்வேறு வீதியின் அபிவிருத்தி தொடர்பில் இருக்கின்ற பிரச்சினை தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் நேற்று 03 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் இத்துடன் ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஜோர்டானிய விமானி எரித்துக் கொலை
அம்மான்: இஸ்லாமிய அரச தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் ஒரு வீடியோ சற்று முன் வெளியானது.
-
பிஸ்மி இஸ்லாமிய பாடசாலை சிறார்களின் சுதந்திர தின விழா
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டு பல்வேறு பிரதேசங்களிலும் இயங்கி வருகின்ற ‘பிஸ்மி’ இஸ்லாமிய பாடசலை மாணவர்களினது சுதந்திர தின விழா நிகழ்வுகள் (04.02.2015) புதன்கிழமை காலை 08:00 மணி தொடக்கம் 10:00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.