Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மீண்டும் மஹிந்த….

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

  • யாழ்ப்பாணம் முஸ்லிம்களை சிவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு பிரதேச செயலாளர் முயற்சிக்கின்றாரா? வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் கேள்வி

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் முஸ்லிம்களை சிவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இனச்சுத்திகரிப்பு செய்வதற்குபிரதேச செயலாளர் முயற்சிக்கின்றாரா? என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • பலமிழந்த ஏற்றுமதி மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்கு அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் முன்னுரிமை

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: புறக்கணிப்பு மற்றும் தரம் குன்றிய சர்வதேச உறவுகள் மூலம் பலமிழந்த ஏற்றுமதி துறைகள் மற்றும் சந்தை வாய்ப்புக்களின் மீட்புக்கு புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் ஊடாக முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் உற்பத்தி மற்றும் மீன்பிடித்துறைகளுக்கான சந்தை அணுகலை மீட்ப்பதற்கும் ஏற்கனவே உள்ள இருக்கின்ற

  • நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

    மெல்போர்ன்: 2015 உலகக் கிண்ணத்தின் 18வது போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் இன்று விளையாட இருக்கின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

  • சு.கவை பிளவுபடுத்தும் ஐ.தே.கவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது

    கொழும்பு: பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரசாரம் மேற்கொள்வது உறுதி. சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் பெற ஐ.தே.க. பொய்யான பிரசாரங்கள் செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாண சபை இளம் உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.

  • உலகக்கிண்ண போட்டிகளில் பாகிஸ்தான் தொடர் தோல்வி: நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

    லாஹூர்: உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி லாஹூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் ‘லீக்’ போட்டி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ் தான் அணி, அடுத்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடம் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

  • காத்தான்குடி ஊர்வீதியில் உடைக்கப்பட்ட சுவர்கள் உடனடியாக மீளமைத்துத் கொடுக்கப்படும்: NFGG – UNP நடாத்திய கூட்டத்தில் உறுதி மொழி

    ஊடகப்பிரிவு NFGG காத்தான்குடி: காத்தான்குடி ஊர்வீதி வீதி அபிவிருத்திக்காக உடைக்கப்பட்ட வீட்டுச் சுவர்கள் உடனடியாக அமைத்துத் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஏற்பாட்டில் காத்தான்குடி – 6 மஸ்ஜிதுல் ஹுதா சின்னப்பள்ளிவாயல் முன்றலில் நேற்று (24.02.2015) நடைபெற்றது. இதன்போதே வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பத்மராஜா அவர்களினால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

  • முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக அனாமேதய ஹர்த்தால் அழைப்பு

    ஹாசிப் யாஸீன் அம்பாறை: முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைவருக்கும் எதிராக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் நளை (26) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கட்சியின் சிரேஷ்ட போராளிகள் என்ற பெயரில் அனாமேதய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதில் எந்தவித உண்மையும் இல்லை இதனை கட்சிப் போராளிகளும் பொதுமக்களும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை இது ஒரு சில அரசியல் வியாபாரிகளின் செயல் என அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின்  செயலாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான…

  • மின் கட்­டணம், இயந்­திர எண்­ணெயின் விலை அடுத்த மாதம் குறை­வ­டையும்

    கொழும்பு: நாட்டில் பல தரப்­பி­னரும் நன்­மை­ய­டையும் வகையில் மின் கட்டணம் மற்றும் இயந்திரங்­களை இயக்க பயன்­ப­டுத்தும் எண்ணெயின் (எஞ்சின் ஒயில்) விலை குறைகப்படவுள்ளதாக தெரிவிக்கும் மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார மின் இணைப்பு பெற்றக்கொள்ளும் முறையும் இலகுவாக்கப்பட்டுள்ளதா­கவும் தெரி­வித்தார்.

  • அரசியலமைப்பு தொடர்பில் சுதந்திரக்கட்சியின் தீர்மானம் வார இறுதிக்குள் எமக்கு கிடைக்கும் : பிரதமர் ரணில்

    கொழும்பு: 100 நாள் வேலைத்திட்டதில் நடைமுறைப்படுத்தப்படாத செயற்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும். அதற்கான அறிக்கை ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். மேலும் அரசியலமைப்புத் தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் இவ்வாரம் எமக்கு கிடைக்கப் பெறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

  • மனைவியின் குற்றச் செயலை மறைத்து அனுதாபம் தேட வீரவன்ச முயற்சி : மனோக ணேசன்

    கொழும்பு: தனது மனைவியின் குற்றச் செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேட வீரவன்ச முயல்கின்றார். அது மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும்  கிளப்ப முயல்கிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம்

    யாழ்ப்பாணம்: ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடக் கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும் யாழ். பல்கலைக்கழக சமூகம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணியொன்றை நடத்தியுள்ளது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

←Previous Page
1 … 510 511 512 513 514 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar